Home /News /business /

இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வெளிநாட்டு முதலீடுகளுக்கான கூடுதல் வரியை குறைப்பு; பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு

  • Last Updated :
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் உடனுக்குடன் வங்கிகளும் வீட்டுக்கடனுக்கான வட்டியை இனி குறைக்கும் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது போல் மேலும் பல சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதமாக இருப்பதாகவும், அதை விட இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் பாக்கி அனைத்தும் 30 நாள்களில் தரப்படும் என தெரிவித்த நிர்மலா ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தும் வகையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் தொகை கூடுதலாக ஒதுக்கப்படும் எனக் கூறிய நிர்மலா சீதாராமன் இதன் மூலம் வங்கிகளில் 5 லட்சம் கோடி அளவிற்கு கடனுதவி வழங்கும் நிலை ஏற்படும் என்றார்.

ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி குறைப்பு பலன்கள் மக்களுக்கு அப்படியே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நிர்மலா, ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால் உடனுக்குடன் அதன் பலன் கிடைக்கும் வகையில் வங்கியிலும் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என்றார்.

அத்துடன் வாகனம் மற்றும் வீட்டுக்கடன்கள் எளிமையாக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், மேலும் வங்கிகளிள் கடன் தொடர்பான பத்திரங்கள் நிலுவையை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 10 சதவீத கூடுதல் வரி விதிப்பை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். இது தொய்ந்து கிடக்கும் இந்திய பங்குச் சந்தையை சரிவிலிருந்து மீட்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும், விஜயதசமி மூலம் வருமான வரி தொடர்பான நோட்டீஸ்களுக்கு நேரடியாக அதிகாரிகளை சந்திக்காமல் அதை சம்பந்தப்பட்டோர் செலுத்தும் முறை அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவித்த நிர்மலா, இனி வருமான வரி நோட்டீஸ் அனைத்தும் பொதுவான ஒரு சர்வரில் இருந்தே அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் நோட்டீஸில் குறிப்பிட்ட தொகையில் மாற்றம் இருக்காது என்றார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரி இனி இருக்காது என்றும் தெரிவித்தார். சிறு குறு நிறுவனங்களுக்கு, பாக்கியாக உள்ள ஜிஎஸ்டி தொகை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், 2020 ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பதிவாகும் பிஎஸ் - 4 ரக வாகனங்கள் அதன் அனுமதிக்கப்பட்ட ஆயுட்காலம் வரை இயங்கலாம் என்றும் தெரிவித்தார்.

Also Watch:
Published by:Yuvaraj V
First published:

Tags: Economy, Nirmala Sitharaman

அடுத்த செய்தி