இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு... வலுப்பெறும் ரூபாய் மதிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு... வலுப்பெறும் ரூபாய் மதிப்பு
மாதிரி படம்
  • Share this:
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 500 பில்லியன் டாலர்களைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  ஜூன் 5ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 501 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அந்த ஒரே வாரத்தில் சுமார் 8 பில்லியன், அதாவது 60 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பது, 2007ம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதன்முறை.

ஒரு வளரும் பொருளாதாரத்தின் முக்கிய அளவுகோலாக அந்நியச் செலாவணி கையிருப்பு பார்க்கப்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டதும், சில நிறுவனங்கள் மூலம் நேரடி அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதுமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா அச்சத்தின் காரணமாக அந்நிய முதலீட்டாளர் தொடர்ந்து பங்குச்சந்தைகளில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற நிலையில், மீண்டும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, கடந்த மே மாதம் 14,569 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் தற்போது வரை சுமார் 22,175 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர். இது மட்டுமின்றி ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததன் மூலம் சுமார் 92000 கோடி ரூபாய் திரட்டியுள்ளதும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதலீடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதனுடன் சேர்ந்து, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது, நம்மிடம் இருக்கும் வெளிநாட்டு கரன்சியின் அளவு, தங்கத்தின் இருப்பு, சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.


இந்தியாவிடம் 463.63 பில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாட்டு கரன்சி உள்ளது.  32.35 பில்லியன் டாலர், அதாவது 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு தங்கம் உள்ளது. சர்வதேச நிதியத்தில் கையிப்பிருப்பாக சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இவை அனைத்தும் சேர்த்து தான் தற்போது இந்திய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த உயர்வின் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அறிகுறிகள் என்னென்ன? எந்த வயதினருக்கு மாறுபடும்? - சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் புது அப்டேட் ..

 
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading