Home /News /business /

ஃபோர்டு நிறுவனத்தின் திடீர் முடிவு.. சென்னை தொழிற்சாலை ஊழியர்கள் ஷாக்!!

ஃபோர்டு நிறுவனத்தின் திடீர் முடிவு.. சென்னை தொழிற்சாலை ஊழியர்கள் ஷாக்!!

Ford

Ford

Ford India | ஃபோர்டு இந்தியா நிறுவனம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால் 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மறைமுக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பது கவலையளிக்க கூடிய செய்தியாகும்.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவில் இருந்து பேட்டரி கார் தயாரிக்கும் முயற்சியை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபோர்ட் நிறுவனத்திற்கு, இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளன. 1998ம் ஆண்டு முதல் சென்னை மறைமலை நகரில் 350ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் ஃபோர்டு தொழிற்சாலையில் 2,600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு எக்கோ ஸ்போர்ட், எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி இல்லாமல் போனதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்தே வெளியேற உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபோர்டு நிறுவன பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கு மசியாத ஃபோர்டு நிறுவனம், உற்பத்தி செய்ய வேண்டியுள்ள 30 ஆயிரம் கார்களை தயாரிப்பதற்காக மட்டும் சில மாதங்களுக்கு தொழிற்சாலை இயங்கும் என அறிவித்தது. இந்நிலையில் தனது பேட்டரி கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் மத்திய அரசு ஃபோர்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருந்தது. அந்தத் திட்டத்தில் ஏராளமான பலன்கள் கிடைக்கும். இதற்கு ஃபோர்டு நிறுவனமும் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால், திடீரென்று அந்த விண்ணப்பத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.



ஃபோர்டு இந்தியாவின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “நாங்கள் கவனமாகப் பரிசீலித்ததில், இந்தியத் தொழிற்சாலையிலிருந்து பேட்டரி கார்கள் ஏதும் தயாரிக்கப்போவதில்லை, ஏற்றுமதி செய்யப்போவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்று உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் சேர்த்த மத்திய அரசுக்கும், அவர்கள் எங்களது ஆய்விற்கு அளித்து வந்த ஆதரவுக்கும் நன்றி. எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை மறுக்கட்டமைக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழிற்சாலையில் மாற்று வழிகளுக்கான அம்சங்களை தொடர்ந்து ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : 30 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக கார் லோன் - அதிரடி திட்டத்தை தொடங்கியது பிரபல வங்கி

செப்டம்பர் 2021 இல் வெளியேறுவதாக அறிவித்த பிறகு, ஃபோர்டு நிறுவனம் மத்திய அரசாங்கத்தின் PLI (உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தின் கீழ் தனது கார்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான விண்ணப்பமும் செய்யப்பட்டது. இனி இந்தியாவில் முதலீடு செய்ய ஃபோர்டு நிறுவனம் தயாராக இல்லாததால் விண்ணப்பத்தை திரும்ப பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபோர்டு இந்தியா நிறுவனம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால் 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மறைமுக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பது கவலையளிக்க கூடிய செய்தியாகும்.
Published by:Selvi M
First published:

Tags: Ford, India

அடுத்த செய்தி