7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஃபோர்டு!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்திற்குத் தமிழகத்திலும் உற்பத்தி ஆலை உள்ளது.

7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஃபோர்டு!
ஃபோர்ட்
  • News18
  • Last Updated: May 20, 2019, 11:43 PM IST
  • Share this:
அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்திற்குத் தமிழகத்திலும் உற்பத்தி ஆலை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்தில் தொடர்ந்து செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் 7,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


ஃபோர்டு நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் இந்தியாவில் 10,000-க்கும் அதிகமாக ஊழியர்கள் உள்ளனர்.

அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் 2,300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் எவ்வளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 14,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்வதாக அறிவித்த அடுத்து ஃபோர்டு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்திய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...