2019-ம் நிதியாண்டில் ₹756.4 கோடி நஷ்டத்தைச் சந்தித்த ஃபுட்பாண்டா..!

2019-ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 12.2 சதவிகிதம் அதிகரித்து 72.84 கோடி ரூபாயிலிருந்து 81.77 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

2019-ம் நிதியாண்டில் ₹756.4 கோடி நஷ்டத்தைச் சந்தித்த ஃபுட்பாண்டா..!
ஃபுட்பாண்டா
  • News18
  • Last Updated: December 27, 2019, 6:25 PM IST
  • Share this:
2019-ம் நிதியாண்டில் மட்டும் ஃபுட்பாண்டா நிறுவனம் சுமார் 756.42 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

பிரபல வாடகை கார் சேவை நிறுவனமான ஓலா-வின் உணவு டெலிவரி சேவை நிறுவனம்தான் ஃபுட்பாண்டா. தொடர் வீழ்ச்சியால் கடந்த 2017-18 நிதியாண்டில் சுமார் 227.95 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளதாக கார்ப்ரேட் விவகார அமைச்சகத்திடம் ஃபுட்பாண்டா அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால், கடந்த 2018-ம் நிதியாண்டைவிட 2019-ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 12.2 சதவிகிதம் அதிகரித்து 72.84 கோடி ரூபாயிலிருந்து 81.77 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஃபுட்பாண்டா குறிப்பிடுகையில், “ஆன்லைன் உணவு ஆர்டர் தளம் என்பது கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு தொழிற்துறை ஆகும். இங்கு வளர்ச்சி நல்ல வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் வெகு முன்னதாகவே நாங்கள் கால் பதித்துவிட்டோம்.


ஆரம்ப காலத்திலேயே நுழைந்ததால் சந்தை நிலவரம், வருவாய், லாபம் ஆகியன குறித்து தற்போது நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. விரைவில் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் துறையில் முன்னனியில் வர கவனம் செலுத்து வருகிறோம். வாடிக்கையாளர் சேவையை திருப்திகரமானதாக முன்னிறுத்தி எங்களது சந்தை மதிப்பையும் உயர்த்துவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்