ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது உணவு அமைச்சகம்!

மத்திய அமைச்சகங்களில் இதுபோன்ற தடை உத்தரவு செயல்படும் போது அது மக்களுக்கான சிறந்த விழிப்புணர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது உணவு அமைச்சகம்!
ராம் விலாஸ் பஸ்வான்
  • News18
  • Last Updated: September 5, 2019, 5:21 PM IST
  • Share this:
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான ப்ளாஸ்டிக் பாட்டில்களை உணவு அமைச்சக அலுவலகங்களில் பயன்படுத்த வருகிற செப்டம்பர் 15-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒற்றைப் பயன்பாடு கொண்ட ப்ளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை விதிக்கும் விதிமுறையை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்தார். பஸ்வான் கூறுகையில், “ஒற்றைப் பயன்பாடு கொண்ட அத்தனை ப்ளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். மத்திய அமைச்சகங்களில் மட்டுமல்லாது அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே இந்தத் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

இத்தடை உத்தரவு குறித்தான கலந்தாலோசனைக் கூட்டத்தில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை, உணவுக்கழகம், இந்திய தர நிர்ணயக் குழுவினர், சட்ட அளவியல் இயக்குநர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இத்தடை உத்தரவை சீரிய முறையில் பின்பற்றி மாற்று ஏற்பாடுகள் அமைச்சகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் பஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய அமைச்சக அலுவலகங்களில் இதுபோன்ற தடை உத்தரவு செயல்படும் போது அது மக்களுக்கான சிறந்த விழிப்புணர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஜிடிபி வீழ்ச்சியால் சரிந்த பங்குச்சந்தை- அதளபாதாளத்தில் வங்கி, ஆட்டோமொபைல் பங்குகள்

ரூ.2 கோடி மோசடி: வனத்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு
First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்