ஹோம் /நியூஸ் /வணிகம் /

உணவு ஆர்டரில் வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகள் - விளக்கும் டெலிவரிமேன்!

உணவு ஆர்டரில் வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகள் - விளக்கும் டெலிவரிமேன்!

மாதிரி படம்

மாதிரி படம்

உணவு டெலிவரியில் பணியாற்றிய பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது வாடிக்கையாளர்கள் செய்யும் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை டெலிவரிமேனாக பணியாற்றிய பெண் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் இப்போது பெரிதும் உதவியாக இருக்கிறது. கொரோனா காலத்தில் பொதுவெளிகளில் செல்ல முடியாமல் இருப்பவர்கள், வேலை காரணமாக ரெஸ்டாரண்டுக்கு சென்று உணவுகளை சாப்பிட முடியாதவர்கள் விரும்பிய உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட முடிகிறது. நகரப் பகுதிகள் மட்டுமல்லாது கிராமங்களில் வசிப்பவர்களும் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு, உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களின் சேவையை விரிவுபடுத்தியுள்ளனர்.

இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வெளியூரில் இருப்பவர்கள், சொந்த ஊரில் இருக்கும் வயதான தாய், தந்தையருக்கு கூட ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யலாம். உணவுகளை உரிய நபரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் டெலிவரி மேனாக பணியாற்றுபவர்கள். அவர்கள் உணவு டெலிவரி செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். அந்தவகையில் உணவு டெலிவரியில் பணியாற்றிய பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது வாடிக்கையாளர்கள் செய்யும் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read:  இத்தனை சாதனைகள் செய்து என்ன பயன்.. அவமானப்படுத்திவிட்டார்களே..! யூனிஸ் கான் குமுறல்!

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் அந்த தவறுகள் மிகவும் எளிதாக அல்லது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், உணவு டெலிவரி செய்பவர்களுக்கு, சிறிய தவறுகளும் மன உளைச்சலாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி ஸ்மித் என்ற பெண் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காரணமாக வேலையை இழந்த அவர், மார்க்கெட்டிங் ஏஜென்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ஏஜென்சி தொழில் வேகமெடுக்கும் வரை பகுதிநேர வேலை ஒன்றில் பணியாற்ற முடிவெடுத்த ஸ்மித், உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

Also Read:   மெர்சல் டு மாஸ்டர்: அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் தளங்களில் வெளியான தளபதி விஜய்யின் மெகா ஹிட் படங்கள்!

போஸ்ட்மேட்ஸ் (Postmates) என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், டெலிவரி செய்யும்போது தான் எதிர்கொண்ட சிக்கல்களைக் கூறியுள்ளார். அதில், வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்யும்போது சரியான வீட்டு முகவரியை, அந்த வீட்டு எண்ணுடன் கொடுக்க வேண்டும். மேலும், அந்த வீட்டின் எண்ணை வீட்டின் முகப்பில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆர்டர்கள் அதிகப்படியாக இருக்கும் நேரங்களில் வீட்டின் எண் இல்லாதபோது, வாடிக்கையாளர்களின் வீட்டை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வரும் வழியை, திசை, வளைவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களுடன் குறிப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் முடிந்தளவுக்கு பாசிட்டிவான ரிவ்யூ கொடுக்க வேண்டும் என்றும், நிறுவனங்களும் கூடுதலான ஆட்களைக் கொண்டு உணவு டெலிவரி செய்ய முயற்சிக்க வேண்டும் எனத் ஸ்மித் தெரிவித்துள்ளார். போதுமான பணியாளர்கள் இருக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொண்டு சேர்க்க முடியும் எனவும் ஸ்மித் கூறியுள்ளார். தான் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதாக கூறிய ஸ்மித், டெலிவரி நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் இதனை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Delivery Boys, Food, Food Delivery App, Food Delivery boys