ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர வேண்டுமா - இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்

உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர வேண்டுமா - இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்

credit cards

credit cards

Credit Card Score | 750 க்கு மேல் இருந்தால் நீங்கள் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவராக கருதப்படுகிறீர்கள். அதற்கும் குறைவான ஸ்கோர் கொண்ட நபர்கள், கடன் பெற முயற்சிக்கும்போது சிக்கல் எழுந்துவிடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம் குறித்து தெரியாமல், பலர் செய்யும் அலட்சியமான காரியங்களால் அவர்களது ஸ்கோர் வெகுவாக குறைந்து விடுகிறது. நமக்கான கிரெடிட் ஸ்கோர் வைத்துதான் நமக்கு கடன் வழங்குவது அல்லது வட்டி வசூல் செய்வது போன்றவை குறித்து தீர்மானிக்கின்றனர்.

உங்கள் வாகனத்திற்கோ அல்லது வீட்டுக்கோ நீங்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அடிப்படையிலும் உங்களுக்கான கிரெட் ஸ்கோர் குறித்து தீர்மானிக்கப்படுகிறது.

வங்கிகள் மற்றும் நிதிசார்ந்த நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் டிரான்ஸ் யூனியன் சிபில், சிஆர்ஐஎஃப் ஹை மார், எக்ஸ்பீரியன், ஈக்யூபாஸ் போன்ற அமைப்புகள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறித்து தீர்மானிக்கின்றன.

நீங்கள் கடன் வாங்குவபராக அல்லது நிதி நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளராக இருக்கலாம். உங்களுடைய நிதி ரீதியான செயல்பாடுகளின் அடிப்படையில் 300 முதல் 900 புள்ளிகள் வரை உங்களுக்கான கிரெடிட் ஸ்கோர் நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, 750 க்கு மேல் இருந்தால் நீங்கள் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவராக கருதப்படுகிறீர்கள். அதற்கும் குறைவான ஸ்கோர் கொண்ட நபர்கள், கடன் பெற முயற்சிக்கும்போது சிக்கல் எழுந்துவிடுகிறது.

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

உடனுக்குடன் பணம் செலுத்துங்கள்

கடனுக்கான மாதாந்திர இஎம்ஐ தொகை, கிரெடிட் கார்டு பில், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றை மாதம் தவறாமல் செலுத்திவிட வேண்டும். இதற்கு நீங்கள் இசிஎஸ் மற்றும் இதர ஆடோ டெபிட் முறைகளை கடைப்பிடிக்கலாம். நீங்களே நேரடியாக சென்று பணம் செலுத்த விரும்பினால், தக்க சமயத்தில் அதுகுறித்து நினைவுகூர்வது அவசியம்.

Also Read : அட இத்தனை நாள் தெரியாம போச்சே... கிரெடிட் கார்டை பயன்படுத்தி மளிகை பொருட்கள் வாங்கினால் இத்தனை சலுகையா?

கிரெடிட் யுடிலைசேஷன் ரேஷியோ கடைப்பிடிக்க வேண்டும்

கிரெடிட் கார்டு பயன்படுத்துவபர்களுக்கு, கிரெடிட் யுடிலைசேஷன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழுத் தொகையையும் நீங்கள் பயன்படுத்தியிருந்தாலோ அல்லது 30 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தியிருந்தாலோ இது பாதிக்கப்படும். உங்கள் வழங்கப்பட்ட அளவை தாண்டி பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

பழைய கார்டுகள் அல்லது அக்கவுண்ட்டுகளை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்

பயன்பாட்டில் இல்லாத பழைய அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்டுகளை நாம் குளோஸ் செய்ய நினைக்கிறோம். ஆனால், அதற்கு பதிலாக குறைந்தபட்ச வரவு, செலவில் அதை கடைப்பிடித்து வந்தால், உங்களுக்கான கிரெடிட் ஸ்கோர் உயரும். இது மட்டுமல்லாமல், தொடர்புடைய நிதி நிறுவனத்திற்கும், உங்களுக்கும் இடையே நீண்ட கால பந்தம் நீடிக்கும்.

Also Read : அதிர்ச்சி தரும் பெர்சனல் லோன் பற்றிய உண்மைகள்.. இனியாவது கவனமாய் இருங்கள்!

கிரெடிட் ஸ்கோர் செக் செய்யவும்

கிரெடிட் ஸ்கோர் குறித்து அவ்வபோது நீங்கள் செக் செய்து கொள்ள வேண்டும். ஏதேனும், கொஞ்சம் சரிந்து வருவதை போல இருந்தால், தக்க சமயத்தில் அதை சரி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுக்கலாம். ஒருவேளை உங்கள் கிரெடிட் ஸ்கோர் தவறாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து கடன் கொடுத்த நிறுவனம் அல்லது வங்கியிடம் நீங்கள் முறையிடலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Credit Card