கடந்த காலங்களில் நீங்கள் கடனை எப்படி திருப்பிச் செலுத்தினீர்கள் என்ற வரலாற்று தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் 3 இலக்க மதிப்புதான் கிரெடிட் ஸ்கோர். பொதுவாக கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது. இந்த ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகளில் உங்களுக்கு கடன் மறுக்கப்படும்.
அதுவே உங்கள் கிரெடிட் ஸ்கோர் 900க்கு நெருக்கமாக இருந்தால் உங்களுக்கான கடன் ஒப்புதல் விரைவாக கிடைக்கும். அதே சமயம் 700க்கு மேலே இருந்தாலே அது சிறப்பான கிரெடிட் ஸ்கோர்தான். கிரெடிட் ஸ்கோர் என்பது மெல்ல, மெல்ல சேரக் கூடியது. நீங்கள் திருப்திகரமான ஸ்கோர் பெற வேண்டுமெனில் தோராயமாக 18 முதல் 36 மாதங்கள் ஆகும்.
வங்கிகளில் நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆய்வு செய்த பிறகுதான், அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு பில்களுக்கு நீங்கள் உரிய நேரத்தில் பணம் செலுத்தவில்லை அல்லது இஎம்ஐ தொகையை உரிய தேதியில் கட்டவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும்.
கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவதற்கான ஆலோசனைகள்
இஎம்ஐ தொகையை எப்போதும் சரியான தேதியில் அல்லது அதற்கு முன்னதாகவே கட்டிவிட வேண்டும். கிரெடிட் கார்டு பில்களுக்கான இறுதிக் கெடு தேதியை தவற விட வேண்டாம்.
உத்தரவாதமற்ற கடன் என்று குறிப்பிடாமல் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு, உத்தரவாதமுள்ள கடன் என்று குறிப்பிடப்படும் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகிய இரண்டு வகையிலும் உங்கள் கடன்கள் கலந்து இருக்க வேண்டும். அதாவது ஒரே சமயத்தில் உங்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் இருக்கும் பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் உயர்வாக இருக்கும்.
உரிய தேவைகள் எதுவும் இன்றி புதிய கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம். தேவையின்றி கிரெடிட் கார்டு வாங்கினால், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உங்கள் மீது தவறான அபிப்ராயத்தை உருவாக்கி விடும்.
இது மட்டுமல்லாமல் அதிகப்படியான கடன் காரணமாகவும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும். நிலுவையில் உள்ள கடனை கட்டிய பிறகு, புதிய கடன் பெற்றீர்கள் என்றால் கிரெடிட் ஸ்கோர் உயரும்.
Also Read : போன் எடுத்தாலே வங்கி கணக்கில் இருந்து மாயமாகும் பணம்
ஒவ்வோர் ஆண்டிலும் அவ்வபோது உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்கோரை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், உங்கள் தனி விவரங்கள் தொடர்பாக ஏதேனும் தவறு செய்யக் கூடும். ஆகவே, அவற்றை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும்.
கடன் பெறும்போது அதனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீண்டதாக எடுத்துக் கொள்ளலாம். இதனால், நீங்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ குறைவாக இருக்கும்.
Also Read : உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதா..? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி
இதை பார்ப்பதற்கு நிறைய இணையதளங்கள் உள்ளன. அதேபோல சிபில் தளத்தில் லாகின் செய்தும் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். இதை சரிபாக்கும்போது பெயர், பிறந்த தேதி, அடையாள சான்று, முகவரி மற்றும் வருமான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டியிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Loan, Tamil News