வாடிக்கையாளர்களிடமிருந்து பேக்கிங் ப்ளாஸ்டிக் பைகளை திரும்பப்பெறும் ஃப்ளிப்கார்ட்!

2021-ம் ஆண்டுக்குள் முற்றிலும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து பேக்கிங் ப்ளாஸ்டிக் பைகளை திரும்பப்பெறும் ஃப்ளிப்கார்ட்!
2021-ம் ஆண்டுக்குள் முற்றிலும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
  • Share this:
ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ப்ளாஸ்டிக் பைகளில் டெலிவரி செய்யப்பட்டிருந்தால் அவற்றை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறும் வேலையைச் செய்து வருகிறது ஃப்ளிப்கார்ட்.

வால்மார்ட் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ப்ளாஸ்டிக் பைகளை மறுசுழற்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற முடிவால் டெலிவரி செய்யப்பட்ட பேக்கேஜிங் ப்ளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்று வருகிறது. அவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதே குறிக்கோள் என்கிறது ஃப்ளிப்கார்ட்.

இதுதொடர்பாக ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்களும், மறுசுழற்சி நிலையங்களையும் ஃப்ளிப்கார்ட் ஏற்படுத்தியுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் முற்றிலும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.


முதற்கட்டமாக இச்சேவை மும்பை, பெங்களூரு, டேராடூன், டெல்லி, கொல்கத்தா, பூனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா...!
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading