அமேசான் இந்தியா, கிட்டத்தட்ட 100 மஹிந்திரா ட்ரியோ சோர் மூன்று சக்கர மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட் கடந்த புதன்கிழமை 2030க்குள் 25,000 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை (Electric Vehicles (EVs)) தனது விநியோக பட்டியியலில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும் பிளிப்கார்ட் ஆனது ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக், மற்றும் பியாஜியோ உள்ளிட்ட முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும் அதன் கடைசி மைல் டெலிவரியை தொடுவதற்கு ஆயத்தமாகியுள்ளது.
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, குவஹாத்தி, புனே உள்ளிட்ட நாடு முழுவதும் விநியோகிக்க பிளிப்கார்ட் ஏற்கனவே இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை பல இடங்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் தளவாடங்கள் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் தவிர, நிறுவனத்தின் விநியோக மையங்கள் மற்றும் அலுவலகங்களைச் சுற்றி சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைக்கவும் இது உதவும்.
நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிளீட்டில் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், அத்துடன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உட்பட உள்நாட்டிலேயே வாகனங்களை கண்டுபிடிக்கவும் அவற்றின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும் இதுபோன்ற செயல் முறை உதவும். பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி, நிறுவனம் சேவை ஒப்பந்தங்களில் தேவைகளை வைக்கவும், அதன் 1,400 விநியோக சங்கிலி வசதிகளுக்கு அருகில் சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவவும், விழிப்புணர்வு திட்டங்களை நடத்தவும், விநியோக நபர்களை மின்சார வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்கான வேலைகளை தாங்கள் முன்னெடுக்க உள்ளதாக கூறியுள்ளது.
Also read... Jio Phone 2021 Offer: இலவச போன், அன்லிமிட்டெட் அழைப்பு... ஜியோவின் 2021 பிரம்மாண்ட அறிவிப்புகள்!
பிளிப்கார்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதன் விநியோகச் சங்கிலியில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், அவற்றின் தடையற்ற செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் அதன் மையங்களில் தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்தவகையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே பெட்ரோல் டீசலுக்கான மாற்று வழியை பல நிறுவனங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. சில நிறுவனங்கள் அதற்கான வேலையை தொடங்கி மக்கள் பயன்பட்டிற்கு வாகனங்களை அளித்து வருகின்றன. இந்திய அரசும் பல மாநில அரசுகளும் நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மக்களை உத்வேகப்படுத்தி வரும் வேளையில் இது போன்று ஒரு செய்தி மின்சார வாகனங்களின் மீதான மக்களின் நம்பக தன்மையை நிச்சயம் அதிகரிக்கும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.