ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் அமேசான் போன்ற இணையவழி முன்னணி வர்த்தக நிறுவனங்கள், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க்கில் (ONDC) இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நெட்வொர்க் அடிப்படையிலான பரிசோதனைத் திட்டங்கள் ஏற்கனவே பெங்களூரு மற்றும் 4 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓஎன்டிசி என்பது தற்போது தொடக்க நிலை சோதனையில் உள்ளது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும், வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிற பெரிய இணையவழி வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்த திறந்தவெளி நெட்வொர்க்கில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவது என்பது முக்கியவத்துவம் வாய்ந்த விஷயமாகக் கருதப்படுகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவான ஈகார்ட் மற்றும் ரிலையனஸ் என்.எஸ்.இ நிறுவனத்தின் ஆதரவு பெற்ற டன்ஸோ ஆகியவை ஏற்கனவே லாஜிஸ்டிக் சேவைகளுக்காக ஓ.என்.டி.சி அமைப்புடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபோன்பே சேவையை இந்த திறந்தவெளி நெட்வொர்க்கில் இணைப்பதற்கான முயற்சிகள் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன என்று வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே நெட்வொர்க்கில் பேடிஎம் ஏற்கனவே இணைந்து விட்டது.
ALSO READ | பற்றி எரியும் நெருப்பில் திருமண விழா - மாஸ் காட்டிய ஹாலிவுட் தம்பதியின் சாகசம்..
இதுகுறித்து தொழில் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ஓஎன்டிசி அமைப்புக்கு ஆதரவளிப்போம் என்பதை பெரும் காமர்ஸ் நிறுவனங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. பேடிஎம், ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஓஎன்டிசி அமைப்புக்கு இடமளிக்கத் தயாராக உள்ளன. இதன் மூலமாக பயனாளிகள் எளிமையாக நெட்வொர்க்கில் இணைய முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தற்போதைய சூழலில், இ வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தளங்களுக்கு வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓஎன்டிசி நெட்வொர்க்கில் இணைவதன் மூலமாக அந்த நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட உள்ளன.
100 நகரங்களில் களமிறங்குகிறது ஓஎன்டிசி
ஓஎன்டிசி அமைப்பு வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 100 நகரங்களில் அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பெங்களூரு, புது டெல்லி, கோவை, போபால் மற்றும் ஷில்லாங் ஆகிய 5 நகரங்களில் மாபெரும் அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ALSO READ | தபால் பெட்டிகள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் ஓஎன்டிசி நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்வதற்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த நெட்வொர்க் என்பது சிறிய வணிகர்களை ஈர்க்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் சேவையில் யூபிஐ பரிவர்த்தனை முறைக்கு கிடைத்ததைப் போன்ற வரவேற்பு இந்த இணையவழி வணிகத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.