ஃப்ளிப்கார்ட்டின் 'பேக் டூ காலேஜ்' விற்பனை - லேப்டாப், ஹெட்ஃபோன்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி!

ஃபிளிப்கார்ட்

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி மற்றும் நோ காஸ்ட் ஈ.எம்.ஐ. ஆப்ஷனும் உள்ளன

  • Share this:
ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) மாணவர்களை இலக்காகக் கொண்டு ஒரு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை 'பேக் டு காலேஜ்'  (Back To College) என்ற பெயரில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் லேப்டாக்கள் (Laptops), ஹெட்ஃபோன்கள் (Headphones), இ-டேப், பவர் பேங்க், டேப்லெட்டுகள், மானிட்டர்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு 80% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி மற்றும் நோ காஸ்ட் ஈ.எம்.ஐ. ஆப்ஷனும் உள்ளன. மேலும் சரிபார்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளாட் ₹ 750 தள்ளுபடியை வழங்குகிறது. Buy 799 முதல் தொடங்கும் பிளிப்கார்ட்டின் முழுமையான பாதுகாப்புத் திட்டங்களுடன் வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் எலெக்ட்ரிக் சாதனத்திற்கான பாதுகாப்பைப் பெறலாம். ரூ. 7,000 வரை எக்ஜேஞ்ச் தள்ளுபடியும், 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் ஈ.எம்.ஐ யும் இதில் அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

லேப்டாப்களுக்கான தள்ளுபடிகள் :

சிறந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட்டில் இருந்து மடிக்கணினிகளை தள்ளுபடி விலையில் சலுகையோடு பெறலாம்.
சில தள்ளுபடிகள் விவரம் :

* 8 ஜிபி RAM மற்றும் 1 TB HDD-யுடன் HP 15s Ryzen 3 மாடல் லேப்டாப் ₹ 36,490 க்கு கிடைக்கும்

* 8 ஜிபி RAM மற்றும் 512 GB HDD கொண்ட Asus VivoBook i5
₹ 55,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது

* i5 10 Gen Mi Notebook 14 43,990 க்கு விற்கப்படுகிறது.

* 4 ஜிபி RAM மற்றும் 1 TB DD கொண்ட Asus VivoBook Core i3 ₹37,990க்கு விற்கப்படுகிறது.

கேமிங் லேப்டாப்கள் :

* 3 ஜிபி கிராஃபிக் கார்டுடன் Lenovo Core i5 ₹ 48,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

* 8 ஜிபி RAM மற்றும் 512 GB HDD கொண்ட Acer Aspire 5 Ryzen 5 விலை ரூ. 50,990 ஆகும்.

* NVIDIA RTX 1650 உடன் HP Pavillion Ryzen 5 வெறும், 49,990க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: 5ஜி போன், ஜியோ லேப்டாப்- உற்று நோக்கவைக்கும் ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம்

பிளிப்கார்ட் சாதாரண மற்றும் கேமிங் மானிட்டர்களுக்கு 45% வரை தள்ளுபடி அளிக்கிறது. 45% வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்
புளூடூத் ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸும் 60% வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைன் உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள ஹெட்ஃபோன்கள் வாங்கு விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

வேலை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான மடிக்கணினிகள் 30% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு பிளிப்கார்ட் ஆபர் விற்பனையில் 60% தள்ளுபடி வழங்கப்படுகின்றன. மடிக்கணினி மற்றும் கீபோர்டு விலை ₹329 முதல் தொடங்குகிறது. பிளிப்கார்ட் 2,199 விலையில் பிரின்டர்களும் வழங்குகிறது.
Published by:Murugesh M
First published: