Home /News /business /

பிளிப்கார்ட்டின் "Big Saving Days"-ல் மொபைல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்!

பிளிப்கார்ட்டின் "Big Saving Days"-ல் மொபைல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்த தள்ளுபடி விற்பனையானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய ஷாப்பிங்காக கருதப்படுகிறது. Big Saving Days-ல் எலெக்ட்ரானிக்ஸ், கேஜெட்ஸ், ஃபேஷன் தயாரிப்புகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், ஆன்லைனில் ஷாப்பிங்கில் இதற்கு முன் வழங்கப்பட்ட ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்காக "Big Saving Days" என்ற சலுகை திருவிழாவை தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு ஒருநாள் முன்னதாக கடந்த 15-ம் தேதியே துவங்கிய இந்த பிக் சேவிங் டேஸ், அனைத்து யூஸர்களுக்கும் 16-ம் தேதி லைவிற்கு வந்தது.

வரும் 21-ம் தேதி வரை Big Saving Days ஆஃபர் திருவிழா லைவில் இருக்கும். இந்த தள்ளுபடி விற்பனையானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய ஷாப்பிங்காக கருதப்படுகிறது. Big Saving Days-ல் எலெக்ட்ரானிக்ஸ், கேஜெட்ஸ், ஃபேஷன் தயாரிப்புகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேலின் போது விமான முன்பதிவுகளில் தள்ளுபடியும் கிடைக்கிறது.

குறிப்பாக பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்டுகள், ஸ்பீக்கர்கள், டிவி-க்கள் மற்றும் பிற எலெக்ட்ரானிக் பொருட்கள் உட்பட சில வகை தயாரிப்புகளுக்கும் சிறந்த சலுகைகள் காணப்படுகிறது. நல்ல ஆஃபரில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க காத்திருந்தவர்களுக்கு Flipkart-ன் இந்த சேல் பல அற்புத ஆஃபர்களை கொண்டு வந்துள்ளது. பல எக்ஸ்சேஞ் ஆஃபர்கள் மற்றும் ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன்கள் உள்ளன.

ALSO READ |  வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!

Big Saving Days 2021 ஸ்மார்ட் ஃபோன்களில் சேல் டீல்ஸ்..

Motorola, Apple, Realme போன்ற பிராண்டுகளின் பிரபலமான ஸ்மார்ட் ஃபோன்களில் சில சிறந்த மற்றும் சுவாரஸ்ய சலுகைகளை Flipkart வழங்குகிறது. இருப்பினும் பெரும்பாலான டீல்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் இலவசங்களை கொண்டிருக்கிறது, விலை குறைப்பு இல்லை.

மோட்டோ ஜி60 (Moto G60):

Big Saving Days-ல் Moto G60 மொபைலை ரூ.16,499 என்ற விலையில் வழங்குகிறது Flipkart. SBI வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ரூ1,000 தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் Moto G60 மொபைலின் விலையை நீங்கள் ரூ.15,499 ஆக குறைக்கலாம்.

ALSO READ |  அதே விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள்.. பிளான்களை திருத்திய BSNL!

மோட்டோரோலா எட்ஜ் 20 (Motorola Edge 20):

இந்த Motorola Edge 20 5G ஸ்மார்ட் ஃபோன் தற்போது ரூ.27,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது வழக்கமான விற்பனை விலையை விட தற்போது ரூ.3,000 குறைவு. இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மற்றும் 144Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ஐபோன் 12 (iPhone 12):

பிளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன் 12-ஐ ரூ.54,999 என்ற தள்ளுபடி விலையில் வழங்குகிறது. கூடுதலாக இந்த ஃபோனை வாங்குபவர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். ஐபோன் 12 மொபைலுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவையும் பெற முடியும்.

ALSO READ |  ரூ.200-க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை யூஸ் பண்ணிக்கலாம்!

ரியல்மி ஜிடி நியோ 2 (Realme GT Neo 2):

Realme GT Neo 2-ன் வழக்கமான விலை இன்னும் ரூ.31,999-ல் தொடங்கும் நேரத்தில், இந்த மொபைல் ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் கிடைக்கிறது, எனவே இதன் விலை ரூ.27,999 ஆக குறைகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் 120Hz OLED டிஸ்ப்ளே, 64MP டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. மேலும் இது Snapdragon 870 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ (iPhone SE):

இந்த Apple iPhone SE மொபைல்டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் சேர்த்து ரூ.30,199 என்ற விலையில் விற்கப்படுகிறது. இது தவிர இந்த ஸ்மார்ட் ஃபோனுக்கு வேறு எந்த தள்ளுபடியும் இல்லை.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Flipkart

அடுத்த செய்தி