• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிளிப்கார்ட்டின் Big Diwali விற்பனை - ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை அதிரடி தள்ளுபடி!

பிளிப்கார்ட்டின் Big Diwali விற்பனை - ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை அதிரடி தள்ளுபடி!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்டின் வழக்கமான விற்பனைகள் அக்டோபர் 25 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

  • Share this:
ஆன்லைன் ஈ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், தீபாவளியையொட்டி மெகா விற்பனையை தொடங்கியுள்ளது, வழக்கம்போல் ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங்க், போகோ உள்ளிட்ட பல பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 4ம் தேதி இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பல பெரிய நிறுவனங்கள் தீபாவளிக்கான போனஸ்களையும் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் ஈ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், பண்டிகையையொட்டி பிக் தீபாவளி விற்பனை அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன்கள் முதல் பல்வேறு பொருட்களுக்கு அதிரடி சலுகை விலைகளும், ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அதிக சிறப்புத் தள்ளுபடி கொடுக்கப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஆப்பிள், சாம்சங், போகோ உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கும் இந்த ஆண்டும் சூப்பர் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கூடுதலான சில சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்மையில் பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டே விற்பனையை நடத்தி முடித்தது. அந்த விற்பனை முடிந்த சில நாட்களிலேயே தீபாவளி விற்பனையையும் அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விழாக்கால விற்பனைச் சலுகை கொண்டாட்டம் அமேசானின் கிரேட் இந்தியன் திருவிழாவோடு அக்டோபர் இறுதி வரை தொடர்கிறது.

பிளிப்கார்ட்டின் வழக்கமான விற்பனைகள் அக்டோபர் 25 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எஸ்.பி.ஐ வங்கி கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் மாடலில், ஐபோன் 12 மாடல் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 53,4999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 12 மினி மாடல், விழாக்காலச் சலுகையாக 42,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ, 30,099 ரூபாய்க்கு இந்த விழாக்காலச் சலுகையில் வாங்கலாம்.

கூகுள் பிக்சல் 4ஏ 31,999 ரூபாயில் இருந்து 25,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. கூகுள் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் 50 விழுக்காடு சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் 4 ஏ வாங்குபவர்களுக்கு கூகுள் நெஸ்ட் மினி ஸ்பீக்கர் 1 ரூபாய்க்கு பெறும் அட்டகாசமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ ஸ்மார்ட்போன் வகைகளில் போகோ சி31 ஸ்மார்ட்போன் 8,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட்டின் Big Diwali விற்பனை


போகோ F3 GT ஸ்மார்ட்போன் 28,999 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் கட்டணமில்லா இ,எம்.ஐ சலுகைகளை பெறலாம். 29,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி F62, இப்போது 18,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 6,000mAh பேட்டரி வசதியுள்ள கேலக்ஸி F12, 9,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. க்வாட் ரியர் கேமராக்கள் மற்றும் 6,000 ஏம்.ஏ.எச் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி F12, 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஓப்போ, ஆசஸ், இன்பினிக்ஸ் மோட்டோரோலா, விவோ போன்ற பிராண்டுகளும் அட்டகாசமான சலுகை விலையில் பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனையில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: