முகப்பு /செய்தி /வணிகம் / 9 ரூபாய்க்கு வியட்நாம் செல்ல விமான டிக்கெட்– Vietjet Air நிறுவனத்தின் சூப்பர் சேவர் சலுகை

9 ரூபாய்க்கு வியட்நாம் செல்ல விமான டிக்கெட்– Vietjet Air நிறுவனத்தின் சூப்பர் சேவர் சலுகை

Vietjet Air நிறுவனத்தின் சூப்பர் சேவர் சலுகை

Vietjet Air நிறுவனத்தின் சூப்பர் சேவர் சலுகை

Vietjet Air | ₹9 க்கு வியட்நாம் டிக்கெட்டை புக் செய்வோர் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டை Vietjet Air விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளம் அல்லது Vietjet Air செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, Indiavietnamvietnamvietnamvietnam

வெளிநாடு பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு வெளிநாட்டின் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவாக இருந்தாலும், விமான டிக்கெட்டுகளின் விலை மலைப்பாக இருப்பதால் பலரும் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் டிக்கெட்களுக்கு டிஸ்கவுன்ட், அதிரடி விலைகுறைப்பு என்று அவ்வபோது அறிவிப்புகளை மேற்கொண்டு வந்தாலும் விமான டிக்கெட்டுகள் குறைந்தபட்ச தொகையாக சில ஆயிரம் ரூபாயாவது இருக்கும். எனவே, பட்ஜெட் வெளிநாட்டுப் பயணம் என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. மேலும், விமான டிக்கெட்டுகள் விலை விரைவில் உயரும் என்ற செய்தி தொடர்ந்து வந்த நிலையில், Vietjet Air நிறுவனம் அதிரடியாக டிக்கெட் விலையைக் குறைத்துள்ளது.

9 ரூபாயில் வியாட்நாம் செல்வதற்கு விமான டிக்கெட் வாங்கலாம் என்ற அறிவிப்பை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த சூப்பர் சேவர் டிக்கெட் சலுகை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். ஆகஸ்ட் 15 2022 முதல் மார்ச் 26 2023 வரை Vietjet Air ஏர் லைன் 30,000 ப்ரமோஷன் டிக்கெட்களை குறைவான விலையில் வழங்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்வதற்கான டிக்கெட் விலை ₹9 என்பதை அறிவித்தது. டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கியமான நகரங்களிலிருந்து 17 வழித்தடங்களில் வியட்நாமிற்கு ஒன்பது ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம்.

இந்தியாவில் இருந்து வியட்நாமில் நான்கு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் வியட்நாமின் தலைநகரான ஹனோய், ஹோ சி மின், ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரை நகரமான டா நாங் மற்றும் கடற்கரை சொர்க்கம் என்று கூறப்படும் ஃபூ குவாக் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.வியட்நாமின் நான்கு நகரங்களுக்கு இந்தியாவிலிருந்து விமானங்களை இயக்கும் Vietjet Air நிறுவனம் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு வாரத்திற்கு நான்கு விமானங்கள் என்ற கணக்கில் விமானங்களை இயக்கி வருகிறது. செப்டெம்பர் 2022 முதல் Vietjet Air கூடுதலான பாதைகளில் 11 விமானங்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

Read More : முகேஷ் அம்பானியின் மகனுக்காக துபாயில் வாங்கப்பட்ட பிரமாண்ட வீடு!

மேலும், டெல்லியில் இருந்து, ஃபூ குவாக் நகருக்கு கூடுதலாக விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றது. மேலும், 9 புதிய வழித்தடங்களில், இந்தியாவின் பிரதான நகரங்களில் இருந்து வியட்நாமின் மற்ற மூன்று முக்கிய நகரங்களுக்கு, ஒவ்வொரு நகரத்துக்கும் கூடுதலாக 4 விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன. தீபாவளி நேரத்தில், மும்பை மற்றும் டெல்லியில் இருந்து கூடுதலாக இரண்டு விமான சேவைகளும் வழங்கப்பட இருக்கின்றன.

30,000 டிக்கெட்டுகள் என்று விளம்பர சலுகையாகVietjet Air நிறுவனத்தின் டிக்கெட் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு காலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள டிக்கெட்டுகள்தான் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ₹9 க்கு வியட்நாம் டிக்கெட்டை புக் செய்வோர் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டை Vietjet Air விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளம் அல்லது Vietjet Air செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுவதால் வியட்நாமில் தாங்கள் விரும்பும் இடத்திற்கு 5 மணி நேரத்திலேயே செல்ல முடியும். இந்த நேரடி விமானங்கள் விமானப் பயணத்தை விலை குறைவானதாகவும் சுலபமானதாகவும் மாற்றுகிறது. Vietjet Air நிறுவனம் இந்தியாவில் இருந்து தெற்காசிய சுற்றுலாத்தலங்களையும் இணைக்கிறது.

First published:

Tags: Automobile, Flight travel, Trending