ஹோம் /நியூஸ் /வணிகம் /

8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

பல சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தி வரும் சூழலில், முதியவர்களுக்கான வட்டி விகிதங்களையும் அதிகரித்துள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சேமிக்கும் பழக்கம் ஒருவருக்கு இல்லையென்றால் எதிர்காலத்தில் நாம் மிகுந்த சிரமத்தை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று தான் அர்த்தம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் செலுத்தி வந்தால் நம்முடைய பொருளாதார நிலை உயரக்கூடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே வயதானக் காலத்தில் நீங்கள் எவ்வித பொருளாதார சிக்கல் இன்றி இருக்க வேண்டும் என்றால் இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள். உங்களுக்காகவே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

  பல்வேறு சேமிப்புத்திட்டங்களின் மூலம் சேமிக்கும் பணத்தை கையில் எடுக்காமல், அதை நிலையான வைப்புத் தொகைக்கு மாற்ற பழகுங்கள் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இந்த செயல்முறை உங்களுக்கு நிச்சயம் நன்மை பயக்கும். குறிப்பாக இன்றைக்கு பல சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தி வரும் சூழலில், முதியவர்களுக்கான வட்டி விகிதங்களையும் அதிகரித்துள்ளது.

  PM kisan: ரூ. 2000 பெறும் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? செக் செய்வது ரொம்ப சுலபம்!

  ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி வட்டி விகிதங்களை சில வங்கிகள் அதிகளவில் உயர்த்தியுள்ளதால், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத் தொகை அதாவது எஃப்டி கணக்குகளை ஆரம்பிக்க நல்ல நேரம் இது தான் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக 8.30 சதவீத அளவிற்கும் சில வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவை எந்தெந்த  வங்கிகள் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  8.30 % வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் விபரங்கள்:

  யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank) தற்போது மூத்த குடிமக்களுக்கு 366 நாள்களுக்கான வைப்புத் தொகைக்கு 8.30% வரை வட்டி வழங்குகிறது. இதோடு யூனிட்டி வங்கி நிலையான வைப்புத் தொகையை ரூபாய் 2 கோடி வரை அதிகரித்துள்ளது. யூனிட்டி வங்கி ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கு 6% வட்டியை வழங்குகிறது.

  வீடு வாங்கும் போது மட்டுமில்லை விற்கும் போதும் வரி கட்ட வேண்டும்..! ஏன் தெரியுமா?

  ஷாகுன் வங்கி ( Shagun bank) தற்போது 1 ஆண்டிற்கான நிலையான வைப்புத் தொகையை செலுத்தும் சீனியர் சிட்டிசன்களுக்கு ஆண்டுக்கு 7.80 % வட்டி விகிதங்களை வழங்குகிறது. இருந்தப் போதும் இந்த சலுகை நவம்பர் 30, 2022 வரை முன்பதிவு செய்த டெபாசிட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

  பேங்க் ஆஃப் இந்தியாவும் சீனியர் சிட்டிசன்களுக்கு 777 நாள்களுக்கு 7.75 சதவீதம் வரை நிலையான வைப்புத்தொகைக்கான வட்டியை வழங்குகிறது. குறிப்பாக பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்களை ஒப்பிடும் போது பேங்க் ஆப் இந்தியாவில் 777 நாள்களுக்கான எஃப்டி லாபகரமானதாக இருக்கும் என்கிறது வங்கி நிர்வாகம். மேலும் பேங்க் ஆஃப் இந்தியா 555 நாள்களுக்கான நிலையான வைப்புத் தொகைக்கு 6.30 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Fixed Deposit, Savings