முகப்பு /செய்தி /வணிகம் / FIXED DEPOSIT : எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் சலுகைகள் இதுதான்!

FIXED DEPOSIT : எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் சலுகைகள் இதுதான்!

வருமான வரி

வருமான வரி

FIXED DEPOSIT sbi : எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம்.

பிக்ஸட் டெப்பாசிட் திட்டம் பாதுகாப்பானது என்ற வகையில் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களும், நடுத்தர வர்க்க மக்களும் இந்த முதலீட்டை தான் தேர்வு செய்கின்றனர். டெர்ம் டெபாஸிட் திட்டத்தின் கீழ் குறுகிய கால முதலீடு மற்றும் நீண்ட கால முதலீடு ஆகியவற்றை செய்து கொள்ளலாம். உங்களுக்கான தேவைகளைப் பொறுத்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

வங்கிகள் மட்டுமல்லாமல் அஞ்சல் நிலையங்களிலும் பிக்ஸட் டெபாஸிட் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் 5 ஆண்டுகால பிக்ஸட் டெபாஸிட் செய்வதற்கும், அதே கால கட்டத்திற்கு அஞ்சல் நிலையத்தில் டெபாஸிட் செய்வதற்கும் இடையே 1.2 சதவீத வட்டி வித்தியாசம் வருகிறது. எஸ்பிஐ வங்கியில் பிக்ஸட் டெபாஸிட் திட்டத்திற்கு 5.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம், அஞ்சல் நிலையத்தில் பிக்ஸட் டெபாஸிட் திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பிக்ஸட் டெபாஸிட் திட்டத்திற்கான புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க.. நடிகை கவுதமியின் 6 வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

புதிய வட்டி விகிதம்

2022 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய அரசு மாற்றி அமைக்கவில்லை. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் சார்பில் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், “2022 - 2023 நிதியாண்டில், 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30ஆம் தேதி வரையிலான முதலாவது காலாண்டில், சிறு சேமிப்பு திட்ட முதலீடுகளுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இல்லை. 2021 - 2022 நிதியாண்டில், 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை 4 ஆவது காலாண்டில் இருந்த வட்டி விகிதம் அப்படியே தொடரும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 2.9 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம், மூத்த குடிமக்களுக்கு 3.4 சதவீதம் முதல் 6.30 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இது கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலில் இருக்கிறது.

இதையும் படிங்க.. EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 2.9% வட்டி

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 3.9% வட்டி

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 4.4% வட்டி

211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையில் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 4.4% வட்டி

1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்குள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 5.1% வட்டி

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுக்குள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 5.2% வட்டி

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுக்குள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 5.45% வட்டி

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுக்குள் வரையிலான டெபாசிட் காலத்துக்கு - 5.5% வட்டி

அஞ்சல் நிலைய வட்டி விகிதம்

அஞ்சல் நிலைய டெர்ம் டெபாஸிட் திட்டங்களுக்கும் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகால அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலில் இருக்கிறது.

1 ஆண்டு கால அளவு - 5.5%வட்டி

2 ஆண்டு கால அளவு - 5.5%வட்டி

3 ஆண்டு கால அளவு - 5.5%வட்டி

5 ஆண்டு கால அளவு - 6.7%வட்டி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Fixed Deposit, Post Office, SBI, STATE BANK