Home /News /business /

Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!

Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!

பிக்சட் டெபாசிட் எஸ்பிஐ

பிக்சட் டெபாசிட் எஸ்பிஐ

Fixed Deposit rates : எஸ்பிஐ இதே ஆண்டில் 2 வது முறையாக மீண்டும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்தியுள்ளது.

    பிக்சட் டெபாசிட் திட்டம் எப்போதுமே முதலீட்டாளர்களின் சாய்ஸில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம், இது ரிஸ்க் இல்லாத முதலீடு என்பது தான். முதலீடு செய்யும் பணத்துக்கு வட்டி, பணத்திற்கு முழு பாதுகாப்பு, முதிர்வு காலத்தின் போது மொத்த பணமும் ரிட்டன் என பிக்சட் சேமிப்பு கணக்கு உத்தரவாதம் கொண்ட நல்ல முதலீடு திட்டமாக இருப்பதால் மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் இந்த திட்டத்தை நாடி செல்கின்றனர். அவர்களை கவர அரசு வங்கிகளில் தொடங்கி, போஸ்ட் ஆபீஸ், பிரைவேட் வங்கி, நிதி நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளுடன் இந்த திட்டத்தை செயல்பாட்டில் வைத்துள்ளன.

    அந்த வகையில் சமீப காலமாக பிக்சட் டெபொசிட் வட்டி விகிதங்களை பல வங்கிகள் உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் கூட கனரா வங்கி, இந்தியன் ஓவ்ர்சீஸ் வங்கி, எச்.எடி.எப்.சி ஆக்ஸிஸ் வங்கி செயல்பாட்டில் இருக்கும் 2 கோடிக்கும் கீழ் செயல்படும் முதலீடு திட்டங்களில் வட்டியை உயர்த்தி இருந்தது. இது வாடிக்கையாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இதை வரவேற்று இருந்தனர். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இதே ஆண்டில் 2 வது முறையாக மீண்டும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்தியுள்ளது.

    இதையும் படிங்க..போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் எது பெஸ்ட்? விரிவான தகவல்!

    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த புதிய வட்டி மாற்றம் மார்ச 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீதும் வட்டி விகிதங்களை 20-40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. தற்போது ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் திட்டத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    read more. epfo : உங்கள் குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் வரை கிடைக்கும்.. பிஎஃப் கணக்கில் இதை செய்தால் மட்டும் போதும்!

    ரூ. 2 கோடிக்கு கீழ் டெபாசிட் செய்யப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி புதிய வட்டி விவரம் :

    1. 211 நாட்கள் முதல் 1 வருட திட்டம் வட்டி 3.30%

    2. 1 வருடம் முதல் 2 வருடம் 3.60%

    மூத்த குடிமக்களுக்கு வழங்க்ப்படும் வட்டி விவரம் :

    1. 211 நாட்கள் முதல் 1 வருடம் 3.80%

    2. 1 வருடம் முதல் 2 வருடம் 4.10 %

    3. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 4.10 %



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: SBI, State Bank of India

    அடுத்த செய்தி