• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிக்சட் டெபாசிட் தொடங்க திட்டமா? பெஸ்ட் வங்கியை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு!

பிக்சட் டெபாசிட் தொடங்க திட்டமா? பெஸ்ட் வங்கியை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு!

ஃபிக்சட் டெபாசிட்

ஃபிக்சட் டெபாசிட்

டெபாசிட் திட்டத்தை தொடங்க சிறந்த வங்கி எது என்பதை தேர்ந்தெடுங்கள்.

  • Share this:
    பிக்சட் டெபாசிட் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக இருந்து வருகிறது

    முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எந்த வங்கியில் என்ன வட்டி விவரம் என்ற தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகளின் வட்டி , சலுகைகளை மதிபீட்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க சிறந்த வங்கி எது என்பதை தேர்ந்தெடுங்கள்.

    ஆக்ஸிஸ் வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளில் 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 15 முதல் 29 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 30 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3% வட்டி 46 முதல் 60 நாட்கள், 61 முதல் 3 மாதங்களுக்குள்ளான திட்டங்களுக்கும் பொருந்தும். இதே போல் அடுத்து வரும் சேமிப்பு மாதங்களை பொருத்து வட்டி மாற்றப்பட்டுள்ளது. இதுக்குறித்த கூடுதல் தகவல்களை ஆக்ஸிஸ் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

    டிசம்பர் மாதம் விவசாயிகள் ரூ.2000 வாங்கி கொள்ளலாம்.. எங்கு? எப்படி? முழு விவரம்!

    யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.50%, மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.00% வட்டி வழங்குகிறது.கனரா வங்கி ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.40%, மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.90% வட்டி தருகிறது. பேங்க் ஆஃப் இந்தியா ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.30%, மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.80% வட்டி அளிக்கிறது. பஞ்சாப்&சிந்த் பேங்க் ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.15%, மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.65% வட்டி வழங்குகிறது.
    ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.10%, மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.60% வட்டி கொடுக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: