எஃப்.டிகளுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்கள் வழங்கும் வங்கிகள் விவரம்!

எஃப்.டிகளுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்கள் வழங்கும் வங்கிகள் விவரம்!

மாதிரிப் படம்.

உங்கள் பணத்தை எஃப்.டி டெபாசிட் செய்வதற்கு முன்னர் பல்வேறு வங்கிகள் வழங்கும் எஃப்.டி வட்டி விகிதங்களை ஒப்பிடுவது மிகவும் முக்கியம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் முதன்மையான முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி  போன்ற சிறந்த வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு வட்டி தொகைகள் வழங்குகிறது.

உங்கள் பணத்தை எஃப்.டி டெபாசிட் செய்வதற்கு முன்னர் பல்வேறு வங்கிகள் வழங்கும் எஃப்.டி வட்டி விகிதங்களை ஒப்பிடுவது மிகவும் முக்கியம். இந்த மாதம் எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் எஃப்.டி டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. எனவே பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்., 

எஸ்பிஐ வங்கி (SBI) 

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ வங்கி ஆகும். இன்று எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தி இருப்பது முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்புகள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஏழு முதல் 45 நாட்களுக்கு இடையிலான எஸ்பிஐ எஃப்.டி.கள் இப்போது 2.9 சதவீதத்த வட்டியை பெறும். 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான எஃப்.டி.கள்  3.9 சதவீதமும், 180 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான எஃப்.டி.க்கள் 4.4 சதவீதத்தையும் பெறும். 1 வருடத்திற்கும் 2 வருடங்களுக்கும் குறைவான எஃப்.டி.கள் வைப்புத்தொகைகளுக்கு இப்போது 10 பிபிஎஸ் அதிகமாகக் கொடுக்கும். எனவே இந்த வைப்புத்தொகை 4.9 சதவீதத்திற்கு பதிலாக 5 சதவீத வட்டி விகிதத்தை பெறும். 2 ஆண்டு முதல் 3 வருடங்களுக்கும் குறைவான எஃப்.டி.க்கள் 5.1 சதவீதத்த வட்டி பெறும். 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான எஃப்.டி.க்கள் 5.3 சதவிகிதம் மற்றும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டி.க்கள் தற்போதையை புதிய அறிவிப்பின்படி 5.4 சதவீதத்தை வட்டியை பெறும். 

ஆக்சிஸ் வங்கி(AXIS BANK)  

ஆக்சிஸ் வங்கி ரூ. 2 கோடிக்குக் கீழ் புதிய எஃப்.டி வட்டி விகிதங்களை ஜனவரி 4, 202 முதல் மாற்றியமைத்துள்ளது. ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொது வாடிக்கையாளர்களுக்கு 2.5 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரையிலான எஃப்.டி. வட்டி அளிக்கிறது. ஆனால் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு 2.50 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC BANK) 

ரூ. 2 கோடிக்குக் கீழ் இருக்கும் எஃப்.டிகளுக்கு வட்டி விகிதங்கள் எச்.டி.எஃப்.சி வங்கியில் நவம்பர் 13, 2020 முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன்படி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான எஃப்.டிகளுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி 2.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30-90 நாட்களுக்கு 3 சதவீதமும் , 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை, 3.5 சதவீதம் மற்றும் 6 மாதங்களில் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக வைப்புகளுக்கு 4.4 சதவீதம் வட்டியும் வழங்குகிறது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.கள் 4.9 சதவீத வட்டியை பெறும். ஒரு ஆண்டு முதல் மற்றும் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டிகள் 4.9 சதவீத வட்டி விகிதத்தைப் பெறும். 2 முதல் 3 ஆண்டுகள் வரை உள்ள எஃப்.டி.க்களுக்கு 5.15 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 5.30 சதவீதம் வட்டியும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டிகளுக்கு 5.50 சதவீத வட்டியையும் எச்.டி.எஃப்.சி வங்கி வழங்குகிறது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி (BANJAB NATIONAL BANK) 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ .2 கோடிக்கு குறைவான எஃப்.டி வட்டி விகிதங்கள்  ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையிலான எஃப்.டி.கள் 3 சதவீதம் முதல் 5.30 சதவீதம் வரை வட்டி விகிதத்தை பெறும். 7-45 நாட்கள் வரையிலான வைப்புகளில், 3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, மேலும் இது 1 வருடத்திற்கும் குறைவான எஃப்.டி.களின் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்கு 5.20 சதவீத வட்டி அளிக்கிறது. 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டி.களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 5.30 சதவீத வட்டியை வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்கள் ரூ .2 கோடிக்கும் குறைவான  எஃப்.டிக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை விட 50 பிபிஎஸ் ( bps)  கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

Also read... Gold Rate | தொடர் விலை உயர்வில் தங்கம் மற்றும் வெள்ளி... இன்றைய நிலவரம் என்ன?

ஐசிஐசிஐ வங்கி (ICICI BANK) 

ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 2 கோடிக்கு  குறைவான எஃப்.டி தொகைக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 21, 2020 முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை எஃப்.டி தொகைகளுக்கு 2.5 சதவீதம் வட்டியும், 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 3 சதவீதம், 91 நாட்களில் 184 நாட்கள் வரை எஃப்.டி. களுக்கு 3.5 சதவீதம் வட்டி அளிக்கிறது. 185 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான முதிர்ச்சியடைந்த எஃப்.டி தொகைகளுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 4.40 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கிறது. 1 ஆண்டு முதல் 18 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி தொகைக்கு 4.9 சதவீத வட்டியும் , 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.க்களுக்கு 5 சதவீத வட்டியும் வழங்கப்படும். 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி  5.15 சதவீதம், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 5.35 சதவீதம், மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டிகளுக்கு 5.50 சதவீத வட்டியும் வழங்கப்படும். உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: