வங்கியை விடுங்க.. போஸ்ட் ஆஃபிஸில் பிக்சட் டெபாசிட் செய்தால் என்னென்ன சலுகைகள் தெரியுமா?

போஸ்ட் ஆஃபிஸ் பிக்சட் டெபாசிட்

ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரையான வரிகளை சேமிக்க முடியும்.

 • Share this:
  போஸ்ட் ஆஃபிஸில் போடப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

  நிலையான வைப்பு தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டம் இன்று பலரின் விருப்பமாக உள்ளது. பணத்தை பெருக்குவதிலும் சரி பாதுகாப்பிலும் சரி இரண்டிலுமே வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் கைக்கொடுக்கிறது. நாம் சேமிக்கும் பணம் நல்ல லாபத்துடன் ஒரு 5 அல்லது 6 வருடத்திற்கு பின்பு நம் கையில் வந்தாலே போதும், அதுவும் பாதுகாப்பாக இருந்தால் போதும், அரசு உத்தரவாதம் அளித்தால் போதும்.இப்படி தான் பலரின் எண்ணமாக உள்ளது. வங்கியில் போடப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை காட்டிலும் போஸ்ட் ஆஃபிசில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டம் அதிக லாபத்தை தரக்கூடியதாக உள்ளது தெரியுமா?

  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தபால் அலுவலக வங்கியில் செயல்படும் பிக்சட் டெபாசிட் திட்டம் , ‘தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபத்தையும் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரையான வரிகளை சேமிக்க முடியும். குறிப்பாக ஆபத்து இல்லை பணத்திற்கு முழு பாதுகாப்பு உண்டு. ரூ .1,000 முதல் வாடிக்கையாளர்கள் இதில் சேமிக்க தொடங்கலாம். 1 முதல் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கிற்கான வட்டி விகிதம் ஆண்டுதோறும் கணக்கில் செலுத்தப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வட்டியை பொருத்தவரையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 5.50% முதல் 6.70% வரை வட்டி வழங்கப்படுகிறது. முதிர்ச்சி காலம் முடிந்தவுடன் விருப்பமுள்ளவர்கள் திட்டத்தை நீட்டிக்கலாம். அதே போல், ஒருவர் தனது தபால் அலுவலக நிலையான வைப்பு கணக்கை, ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலையத்திற்குக்கோ அல்லது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்ற முடியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: