இன்றைய அவசர உலகில் சேமிப்பு குறைந்து விட்டாலும் நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு பலவகையான காரணங்களை கூறலாம். வட்டி, பாதுகாப்பு, வரிச்சலுகை மற்றும் குறைந்த கால முதலீடு. இதை எல்லாம் எதிர்பார்த்து தான் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கூட பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடி சென்று முதலீடு செய்கின்றனர். அதே நேரம், பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய தொடங்கிய பின்பு எதாவது காரணத்திற்காக பணத்தை பாதியில் எடுக்க நேர்ந்தால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் குறுகிய கால சேமிப்பு ஆண்டு, அதாவது 1 மற்றும் 2 ஆண்டுகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்தால் அதில் அதிக வட்டிகளை கொடுக்கும் வங்கிகளையும், அதன் வட்டி விகிதத்தையும் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!
ஐடிஎஃப்சி வங்கி ஒரு வருட த்திற்கு குறைவான ஆண்டுக்கு ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 5.75 சதவீத வட்டி வழங்குகிறது, டிசிபி பேங்க் 5.5 சதவீத வட்டியை ஒருவருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது., ஆர்பிஎல் வங்கி ஓராண்டுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீத வட்டி வழங்குகிறது, பந்தன் பேங்க் ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 5.75 சதவீத வட்டியை வழங்குகிறது, இந்தஸ்இந்த் வங்கி ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு வழங்கும் வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.
இதையும் படிங்க.. மோசடி ரம்மி… நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஜிபி சைலேந்திர பாபு
ஐடிஎஃப்சி வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 6.00 சதவீத வட்டி வழங்குகிறது, ஆர்பிஎல் வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீத வட்டி வழங்குகிறது, பந்தன் பேங்க் 2 ஆண்டுக்கு குறைவான ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 5.25 சதவீத வட்டியை வழங்குகிறது,டிசிபி பேங்க் 6.50 சதவீத வட்டியை இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.