இந்தியாவில் பணவீக்கம் காரணமாக கடுமையான பணவியல் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் வங்கிகளும் கடன்கள் மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி ரெப்கோ வட்டி விகிதத்தை ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகளும், மே மாதத்தில் 40 அடிப்படை புள்ளிகளும் உயர்த்தியது.
இதனை அடுத்து, வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் முதலில் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தின.
இதன் ஒரு பகுதியாக, பிஎன்பி (பஞ்சாப் நேஷனல் வங்கி), ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகள் சமீபத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகிய மூன்று வங்கிகள் ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கும் தற்போதைய ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) வட்டி விகிதங்கள் குறித்த விவரங்கள் இதோ...
1. பாரத ஸ்டேட் பேங்க் (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு):
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.40 சதவீதம்
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.40 சதவீதம்
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.10 சதவீதம்
கடன் வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு - 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.80 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவானவர்கள்: பொது மக்களுக்கு - 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.95 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம்.
2. ஹெச்டிஎஃப்சி வங்கியின் FD வட்டி விகிதம் (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு):
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்
மூத்த குடிமக்களுக்காகவே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஸ்பெஷல் திட்டங்கள்!
6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.15 சதவீதம்
9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.15 சதவீதம்
1 ஆண்டு: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.20 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்.
3. பஞ்சாப் நேஷனல் பேங்க் (ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு):
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
1 ஆண்டு: பொது மக்களுக்கு - 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.80 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.80 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.10 சதவீதம்
1111 நாட்கள்: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fixed Deposit, HDFC, Savings, SBI