ஹோம் /நியூஸ் /வணிகம் /

FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

ஃபிக்சட் டெபாசிட்

ஃபிக்சட் டெபாசிட்

FIXED DEPOSIT latest interest : பல வங்கிகளும் தாங்கள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்ததாக செய்தி வெளியானது.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

ஃபிக்சட் டெபாசிட் என்று கூறப்படும் நிலையான வைப்பு நிதிகள் எல்லா காலத்திலுமே மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பாக கருதப்பட்டு வருகிறது. எல்லா வங்கிகளுமே பல கால அளவுகளில், முதலீடு செய்யும் நபரின் வயதுக்கு ஏற்ப, தொகைக்கு ஏற்றவாறு வைப்பு நிதிகளுக்கு வட்டி அளித்து வருகிறது. அவ்வப்போது வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை, ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப பொது மற்றும் தனியார் வங்கிகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் பல வங்கிகளும் தாங்கள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்ததாக செய்தி வெளியானது. 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FDக்கு எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிஎன்பி வங்கிகள் வழங்கும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

தனியார் வங்கிகளின் திடீர் அறிவிப்பு.. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இனி அதிக லாபம் பார்க்கலாம்!

நிலையான வைப்பு நிதிகளுக்கு எஸ்பிஐ வங்கி வழங்கும் வட்டி விகிதம்:

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 2.90 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3.40 சதவீதம் வட்டி வழங்குகிறது.

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.90 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது.

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.

211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.60 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.30 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.

2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.35 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.85 சதவீதம் வட்டி வழங்குகிறது.

3 வருடம் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.45 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.95 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஹோம் லோனில் EMI கட்ட தாமதமானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

5 வருடம் முதல் 10 வருடங்களுக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6.30 சதவீதம் வட்டி வழங்குகிறது.

நிலையான வைப்பு நிதிகளுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கும் வட்டி விகிதம்:

7 நாட்கள் முதல் 14 நாட்கள் மற்றும் 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 2.75 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

30 நாட்கள் முதல் 45 நாட்கள், 45 நாட்கள் முதல் 60 நாட்கள் மற்றும் 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.25 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3. 75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

91 நாட்கள் முதல் 120 நாட்கள், 121 நாட்கள் முதல் 150 நாட்கள் மற்றும் 151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.75 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

185 நாட்கள் முதல் 210 நாட்கள், 211 நாட்கள் முதல் 270 நாட்கள், 271 நாட்கள் முதல் 289 நாட்கள் மற்றும் 289 நாட்கள் முதல் 1 வருடத்துக்குள் உள்ள FD கணக்குகளுக்கு 4.65 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.15 சதவீதம் வட்டி வழங்குகிறது.

1 வருடம் முதல் 389 நாட்கள், 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவு, 15 மாதங்கள் முதல் 189 மாதங்களுக்கு குறைவாக மற்றும் 18 மாதங்கள் முதல் 2 வருடங்களுக்குள் உள்ள FD கணக்குகளுக்கு 5.35 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.85 சதவீதம் வட்டி வழங்குகிறது.

2 வருடங்கள் 1 நாள் முதல் 3 வருடங்கள் வரை கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6 சதவீதம் வட்டி வழங்குகிறது.

3 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் வரை கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.70 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6.20 சதவீதம் வட்டி வழங்குகிறது.

5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.75 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

நிலையான வைப்பு நிதிகளுக்கு பிஎன்பி வழங்கும் வட்டி விகிதம்:

7 நாட்கள் முதல் 14 நாட்கள், 15 நாட்கள் முதல் 29 நாட்கள், மற்றும் 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

45 நாட்கள் முதல் 90 நாட்கள், வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.25 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3. 75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

180 நாட்கள் முதல் 270 நாட்கள், மற்றும் 271 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.5 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

1 வருடம் மற்றும் 1 வருடத்துக்கு மேற்பட்டு 2 வருடங்கள் வரையிலான FD கணக்குகளுக்கு, 5.30 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 5.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.

2 வருடத்துக்கு மேற்பட்டு 3 வருடங்கள் வரை மற்றும் 3 வருடத்துக்கு மேற்பட்டு 5 வருடங்கள் வரையிலான FD கணக்குகளுக்கு, 5.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6 சதவீதம் வட்டி வழங்குகிறது.

5 வருடத்துக்கு மேற்பட்டு 10 வருடங்கள் வரையிலான FD கணக்குகளுக்கு, 5.60 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 6.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank, Fixed Deposit