பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை பிரபல வங்கியான கோடாக் மகேந்திரா வங்கி உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வெறும் பிக்சட் டெபாசிட் திட்டம் மட்டுமில்லை சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியையும் உயர்த்துவதாக கோடாக் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதால் மாத தவணை தொகை உயரும் சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வங்கிகள் டெபாசிட் திட்டங்களின் வட்டியை உயர்த்தி வாடிக்கையாளர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது கோடாக் வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூன் 13 முதல் ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமான தினசரி இருப்புக்கான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!
அதே போல் ஜூன் 10 முதல் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதங்களும் 10 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிக்சட் டெபாசிட் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம்.
ரூ.50 லட்சத்துக்கும் மேலான சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கு வட்டி விகிதம் 3.50%ல் இருந்து ஆண்டுக்கு 4% வட்டியாக உயர்த்தப்படுகிறது. ரூ 50 லட்சத்திற்கும் குறைவான டெபாசிட்களுக்கு 3.5% வட்டி விகிதம் மாறவில்லை.
ரிட்டயர்மென்ட் காலத்துக்கு பிறகு ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? இதை செய்யுங்கள்!
பிக்சட் டெபாசிட் வட்டி:
ரூ.2 கோடிக்கும் குறைவான FDகளுக்கு, 365 நாட்கள் திட்டத்துக்கு 5.50%, 391 நாட்கள் 5.65% வட்டி வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான திட்டங்களுக்கு 5.75% வட்டி விகிதம், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு குறைவான அல்லது அதற்கு சமமான தவணைகளுக்கு 5.90% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 ஆண்டு கால திட்டத்திற்கு 5.25% வட்டி விகிதம், 180 நாட்களில் இருந்து 363 நாட்கள் வரை திட்டத்துக்கு 4.75% வட்டி ஆகியவை அப்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்வு கால திட்டத்திற்கு 3.50% வட்டி, 31 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை வட்டி விகிதம் 3% வழங்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Fixed Deposit, Savings