Home /News /business /

மூத்த குடிமக்களுக்கு ஒரு குட்நியூஸ்... இந்த வங்கிகளில் எல்லாம் FD வட்டி விகிதம் உயர்வு.! 

மூத்த குடிமக்களுக்கு ஒரு குட்நியூஸ்... இந்த வங்கிகளில் எல்லாம் FD வட்டி விகிதம் உயர்வு.! 

 ஃபிக்சட் டெபாசிட்

ஃபிக்சட் டெபாசிட்

Fixed Deposit Interest Rate | தற்போது சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஐடிபிசி மற்றும் ஐசிஐசிஐ ஆகிய இரண்டு வங்கிகளும் தங்களது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஃபிக்சட் டெபாசிட் என்பது வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைப்பது, அப்படி முதிர்வு காலம் வரை வைக்கப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது, ஏதாவது காரணத்திற்காக பணத்தை பாதியில் எடுக்க நேர்ந்தால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஐடிபிசி மற்றும் ஐசிஐசிஐ ஆகிய இரண்டு வங்கிகளும் தங்களது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (USFB) 20 ஆகஸ்ட் 2022 முதல் இடையில் திரும்ப பெற இயலாத ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. 2-3 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.1% வரை வட்டி வழங்குகிறது



அதன் அழைக்க முடியாத மொத்த வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்த வங்கி 2-3 ஆண்டுகள் மற்றும் 3 - 5 ஆண்டுகள் வரையிலான ரூ. 2 கோடிக்கு மேல் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.1% வரை வட்டியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Also Read : மாதம் ரூ.9,250 வரை பென்சன் கிடைக்கும்.. அரசு தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

அழைக்க முடியாத டெபாசிட் என்பது, குறிப்பிட்ட முதிர்வு காலத்திற்கு முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற முடியாத திட்டமாகும். மேலும், இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டியானது 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு காலாண்டு கூட்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மருத்துவம் போன்ற பிற காரணங்களுக்காக பணத்தேவை ஏற்படலாம் என்பதால், அவர்களுக்கு திரும்ப அழைக்க முடியாத வைப்புத்தொகை வழங்கப்படுவதில்லை என்றும் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.



யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஜூலை 6, 2022 முதல் மாற்றியமைத்துள்ளது. தற்போது மூத்த குடிமக்களுக்கு 2-3 ஆண்டுகள் மற்றும் 3-5 வருட கால டெபாசிட்டுகளுக்கு 8.15% வரை வட்டி வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, 2-3 ஆண்டுகள் மற்றும் 3-5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகப்பட்சமாக 7.65 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

Also Read : காலாவதியான பாலிசிகளை மீட்க எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

IDBI வங்கியின் புதிய FD விகிதம்:

ஐடிபிஐ வங்கி, பல்வேறு தவணைகளுக்கான டெர்ம் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இது ஆகஸ்ட் 22, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



ஐடிபிஐ வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களுக்கு அதிகப்பட்சமாக 6.55 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அம்ரித் மஹோத்சவ் FD திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட கால சிறப்பு 500 நாட்கள் வைப்புத்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான அதிகப்பட்ச வட்டி விகிதம் 6.70 சதவீதமாகும். மேலும் இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30, 2022 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

ஐடிபிஐ வங்கி அமெரிக்க டாலர்கள் மூலமாக செய்யப்படும் எஃப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்டுகளுக்கு 500 நாட்களுக்கு சிறப்பு முதிர்வு காலத்தையும், 3.63% வட்டியையும் வழங்குகிறது.



ICICI ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்:

கடந்த வாரம், ஐசிஐசிஐ வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட தவணை காலங்களுக்கான நிலையான வைப்பு விகிதங்களை திருத்தியுள்ளதாக அறிவித்தது. அதன்படி, ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதம் முதல் 6.10 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Bank, Fixed Deposit, Interest rate hike

அடுத்த செய்தி