நல்ல லாபம்.. நல்ல வட்டி.. கிடைத்தால் சேமிப்பு கணக்கில் தூங்கும் பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட மாட்டீங்களா என்ன?
பணத்தை சேமிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. முதலீடு திட்டங்களில் சேமிக்கிறோம் என்று தவறான திட்டங்களை தேர்வு செய்தால் நமக்கு தான் நஷ்டம். அதுமட்டுமில்லை லாபம் கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான். அதனால் தான் எப்போதுமே நன்கு ஆராய்ந்து பல முறை விசாரித்த பின்னரே முதலீடு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய சூழலில் தொழிலதிபர்கள் உட்பட பணக்காரர்கள் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்கின்றனர். அதற்கு காரணம் இருக்கு. fd திட்டங்களில் நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைக்கிறது. ஒருவேளை உங்கள் மனதிலும் அப்படி ஒரு ஐடியா இருந்தா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுவாக எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டியை வழங்குவதில்லை. பொதுத்துறை வங்கிகளிலேயே யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி நல்ல வட்டியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதுக்குறித்து தான் இங்கே பார்க்க போகிறோம். யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ரூ.2 கோடிக்குமான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.50% வட்டியை வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்கள் என்றால் வட்டி 6% வழங்குகிறது.
கனரா வங்கியை எடுத்துக்கொண்டால் இங்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் குறிப்பாக ரூ. 2 கோடிக்கு குறைவான திட்டங்களில் 5.40% வட்டி வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு வட்டி 5.90% ஆகும். இதுதவிர ஸ்மால் ஃபினாஸ் கம்பெனிகளும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை செயல்பாட்டில் வைத்துள்ளனர். ஒருவேளை வங்கியை காட்டிலும் உங்களின் தேர்வு ஃபினாஸாக இருந்தால் கவனம் அவசியம். நேரில் சென்று ரூல்ஸ் அண்ட் கண்டிஷன்களை விசாரித்த பின்னரே முடிவு எடுப்பது நல்லது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.