• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.75% வட்டி.. இதனால் தான் இந்த பேங்க பெஸ்ட்டுன்னு சொல்றாங்க!

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.75% வட்டி.. இதனால் தான் இந்த பேங்க பெஸ்ட்டுன்னு சொல்றாங்க!

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்

பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி மற்றும் ரூல்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • Share this:
    ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் அதிக வட்டி என தெரிந்து கொள்ளுங்கள்.

    நீண்ட நாள் சேமிப்பைக் காட்டிலும் ஸ்மார்ட்டான சேமிப்பு எப்போதுமே உங்களுக்கு கைக்கொடுக்கும். அதை மறவாதீர்கள். அதற்கு முதல் படி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது.நவீன காலமாக மக்கள் பலரும் பிக்சட் சேமிப்பு திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் இதில் நல்ல லாபம் பார்க்கலாம். நீங்களும் இதை சற்று கவனத்தில் கொண்டு லாபம் தரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

    குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டங்களை பெரும்பாலும் மக்கள் தேர்ந்தெடுக்க காரணம் வட்டி தான். அந்த வகையில், ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் ஆக்சிஸ் பேங்க் பலரின் தேர்வாக இருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் வட்டி. இங்கு அதிக வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. அதே சமயம் நீங்கள் சில வங்கிகளில் விசாரித்து பார்த்து ஒப்பிடுவதும் முக்கியம்.
    சமீபத்தில் பல வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி மற்றும் ரூல்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் குறிப்பாக ஆக்சிஸ் வங்கியை எடுத்துக் கொண்டால், ரூ.2 கோடி வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 2.50 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வெவ்வேறு டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    7 - 29 நாள் வரை - 2.50%, 30 - 3 மாதம் வரை - 3% , 3 - 6 மாதம் வரை - 3.5% என 2 - 3 ஆண்டு - 5.50%,
    5 - 10 ஆண்டு வரை - 5.75% என வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் புதியதாக பிக்சட் டெபாசிட் திட்ட தொடங்க திட்டமிட்டிருந்தால் ஆச்சிஸ் பேங்கை அணுகுவது நல்லது.


    also read..வெறும் 75 நாட்களுக்கு அதிக வட்டி தரும் சூப்பரான டெபாசிட் திட்டம்! இப்பவே யூஸ் பண்ணிக்கோங்க



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: