Home /News /business /

FIXED DEPOSIT: வட்டி அதிகமாக தர போட்டி போடும் எஸ்பிஐ vs போஸ்ட் ஆபீஸ்.. உங்கள் தேர்வு எது?

FIXED DEPOSIT: வட்டி அதிகமாக தர போட்டி போடும் எஸ்பிஐ vs போஸ்ட் ஆபீஸ்.. உங்கள் தேர்வு எது?

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

FIXED DEPOSIT interest : போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1-3 ஆண்டுகளுக்கு 5.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது

    பிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் நல்ல வட்டி தர பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பும் போட்டி போடுகின்றனர். ஒருவேளை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது உங்களது வாழ்நாள் கனவாக இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது? வாங்க விரிவாக பார்க்கலாம்.

    வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது கையிருப்பாக உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.அதுமட்டுமில்லை பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. அதே போல் போஸ்ட் ஆபீஸிலும் பிக்சட் டெபொசிட் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் தொடங்க நினைப்பவர்கள், தொடங்கியவர்கள் இதை தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது!

    இந்த பதிவில் எஸ்பிஐ vs போஸ்ட் ஆபீஸில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கும் வட்டி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    எஸ்பிஐ வங்கியில் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 2.9 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை வட்டி விகிதத்தை அளிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ 50 அடிப்படை புள்ளிகளை (பிபிஎஸ்) கூடுதல் வைப்புத்தொகைக்கு வழங்குகிறது, இது முறையே 3.4 சதவீதம் முதல் 6.3 சதவீதம் வரை விகிதங்களை அமைக்கிறது. இந்த கட்டணங்கள் பிப்ரவரி 15, 2022 முதல் அமலுக்கு வந்தன.

    7-45 நாட்கள்: 2.9 சதவீதம்

    46-179 நாட்கள்: 3.9 சதவீதம்

    180-210 நாட்கள்: 4.4 சதவீதம்

    211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: 4.4 சதவீதம்

    1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: 5.1 சதவீதம்

    2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.2 சதவீதம்

    3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.45 சதவீதம்

    5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை: 5.5 சதவீதம்

    போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1-3 ஆண்டுகளுக்கு 5.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஐந்தாண்டு வைப்புத்தொகைக்கு இங்கு கிடைக்கும் வட்டி 6.7 சதவீதம்.

    இதையும் படிங்க.. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே போஸ்ட் ஆபீஸ் இதை செய்கிறது!

    1 ஆண்டு: 5.5 சதவீதம்

    2 ஆண்டுகள்: 5.5 சதவீதம்

    3 ஆண்டுகள்: 5.5 சதவீதம்

    5 ஆண்டுகள்: 6.7 சதவீதம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings, SBI

    அடுத்த செய்தி