சேமிப்பு என்பது வெறும் முதலீடு பணத்தை மட்டும் தருவதில்லை அத்துடன் சேர்த்து எக்ஸ்ட்ரா வட்டியும் கிடைத்தால் தான் அந்த சேமிப்பு முழுமையாகும். அதிலும் சேமிக்கும் பணத்துக்கு வரிச்சலுகையும் கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் தான். இவை எல்லாமே சேர்ந்து அளிக்கும் திட்டம் தான் பிக்சட் டெபாசிட். இந்த திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு வட்டி மட்டும் இல்லை சில சமய்ங்களில் சேமிக்கும் பணத்திற்கு வரிச்சலுகையும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டங்களில் முதலீடு செய்தால் வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச்சலுகை கிடைக்கிறது டாக்ஸ் சேவிங்ஸ்
பிக்சட் டெபாசிட் (Tax saving fixed deposit) ஐந்து வருட டெபாசிட் காலத்துடன் வருகின்றன. இந்த காலத்திற்கு இடையில் நீங்கள் டெபாசிட் செய்து வைத்த பணத்தை எடுக்க முடியாது. மேலும் இதில் முதலீடு செய்வதால் 1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும்.இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு சில தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் அளிக்கின்றன. அந்த வங்கிகளின் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க.. 2 வது பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறலாம்.. எப்படி? முழு விபரம்!
RBL வங்கியிலும் வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால், அது 5 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அதிகரிக்கும்.Deutsche Bank, IDFC First Bank மற்றும் Yes Bank ஆகியவை வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. வெளிநாட்டு வங்கிகளில், Deutsche சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.1.5 லட்சமானது, ஐந்தாண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அதிகரிக்கும்.
ithaiyum padingka.. LIC திட்டத்தில் வந்துள்ள முக்கியமான மாற்றம் என்ன? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
வரி சேமிப்பு வைப்புத் தொகைக்கு 6.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில், சூர்யோதாய் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. நீங்கள் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.10 லட்சமாக உயரும்.உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வரிசேமிப்பு வைப்புகளுக்கு 6.40 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், ரூ.2.06 லட்சமாக உயரும்.
இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.