ஹோம் /நியூஸ் /வணிகம் /

Fixed deposit: வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

Fixed deposit: வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

Fixed deposit FD rates : ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 3 வங்கிகள் வழங்கும் வட்டி விவரம்

 • Trending Desk
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்த தொடங்கிய பிறகு நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய FD-க்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து திருத்தியமைத்து வருகின்றன. 

  மே 2022 முதல் வங்கி FD வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த செப்டம்பர் இறுதியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்தது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் தங்கள் FD-க்களின் வட்டி விகிதங்களை மாற்றி அதிகரித்துள்ளன. இதில் SBI, HDFC, ICICI Bank, Kotak Mahindra, Axis Bank உள்ளிட்ட வங்கிகளும் அடக்கம்.

  நிலையான வைப்பு தொகை என்று குறிப்பிடப்படும் Fixed deposits மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும். இதற்கிடையே ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 3 வங்கிகள் ரூ.2 கோடிக்கும் குறைவான FD-களுக்கு வழங்கி வரும் வட்டி விகிதங்களின் ஒப்பீட்டை இப்போது பார்க்கலாம்.

  ஆக்சிஸ் வங்கியின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்:

  - 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் என இரு பிரிவினருக்கும் 3.50% வட்டி வழங்குகிறது. இதே போல 15 நாட்கள் முதல் 29 நாட்கள், 30 நாட்கள் முதல் 45 நாட்கள், 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் ஆகியோருக்கு 3.50% வட்டி வழங்கப்படுகிறது.

  இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

  - 61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 4% வட்டியும், 3 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்கும் குறைவான மற்றும் 4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்கும் குறைவான மற்றும் 5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 4.25% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

  6 மாதங்கள் முதல் 7 மாதங்களுக்கும் குறைவான, 7 மாதங்கள் முதல் 8 மாதங்களுக்கும் குறைவான, 8 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவான, 9 மாதங்கள் முதல் 10 மாதங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்களுக்கு பொதுமக்களுக்கு 5% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5.25% வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

  10 மாதங்கள் முதல் 11 மாதங்களுக்கும் குறைவான, 11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 25 நாட்கள் வரையிலான மற்றும் 11 மாதம் 25 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொது மக்களுக்கு 5% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5.25% வட்டியும் வழங்கப்படுகிறது.

  1 வருடம் முதல் 1 வருடம் 5 நாட்களுக்கு குறைவான, 1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 11 நாட்களுக்கு குறைவான, 1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 25 நாட்களுக்கும் குறைவான, 1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதங்களுக்கும் குறைவான, 13 மாதங்கள் முதல் 14 மாதங்களுக்கும் குறைவான, 14 மாதங்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 6.10% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5.85 % வட்டியும் வழங்கப்படுகிறது.

  லோன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. பங்குகள் மீதும் கடன் வாங்கலாம்!

  15 மாதங்கள் முதல் 16 மாதங்களுக்கும் குறைவான, 16 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கும் குறைவான, 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான, 18 மாதங்கள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொதுமக்களுக்கு 6.15% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.90 % வட்டியும் வழங்கப்படுகிறது.

  2 ஆண்டுகள் முதல் 30 மாதங்களுக்கும் குறைவான, 30 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 6.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.95% வட்டியும் வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான, 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 6.10% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.85% வட்டியும் வழங்கப்படுகிறது.

  எச்.டி.எஃப்.சி வங்கியின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்:

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான, 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்களுக்கு பொது மக்களுக்கு 3% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50% வட்டியும் வழங்கப்படுகிறது.

  30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான, 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்களுக்கு பொது மக்களுக்கு 3.50% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4.00% வட்டியும் வழங்கப்படுகிறது.

  61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான மற்றும் 90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான FD அக்கவுண்ட்களுக்கு முறையே பொது மக்களுக்கு 4% & 4.25%, சீனியர் சிட்டிசன்களுக்கு 4.50% & 4.75% வட்டி வழங்கப்படுகிறது.

  6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான, 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரையிலான FD அக்கவுண்ட்களுக்கு பொது மக்களுக்கு 5% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5.50% வட்டியும் வழங்கப்படுகிறது.

  1 ஆண்டு மற்றும் 1 ஆண்டு 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்களுக்கு பொது மக்களுக்கு 5.70% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.20% வட்டியும் வழங்கப்படுகிறது.

  2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொது மக்களுக்கு 5.80%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.30% வட்டி வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொது மக்களுக்கு 6.10%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.36% வட்டி வழங்கப்படுகிறது.

  5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொது மக்களுக்கு 6.00%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.75% வட்டி வழங்கப்படுகிறது.

  ஐசிஐசிஐ வங்கியின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்:

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை, 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொது மக்களுக்கு 3.00%, சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50% வட்டி வழங்கப்படுகிறது.

  30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை, 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை, 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 3.50%, சீனியர் சிட்டிசன்களுக்கு 4.00% வட்டி வழங்கப்படுகிறது.

  91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை, 121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை, 151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 4.20%, சீனியர் சிட்டிசன்களுக்கு 4.75% வட்டி வழங்கப்படுகிறது.

  185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை, 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை, 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை, 290 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 4.90%, சீனியர் சிட்டிசன்களுக்கு 5.40% வட்டி வழங்கப்படுகிறது.

  1 வருடம் முதல் 389 நாட்கள் வரை, 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான மற்றும் 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்ஸ்களுக்கு பொது மக்களுக்கு 5.70%, சீனியர் சிட்டிசன்களுக்கு 5.20% வட்டி வழங்கப்படுகிறது.

  18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.70%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.20% வட்டி வழங்கப்படுகிறது.

  2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.80%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.30% வட்டி வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.10%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.

  5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.00%, சீனியர் சிட்டிசன்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Fixed Deposit, Savings