முகப்பு /செய்தி /வணிகம் / Fixed Deposit: பணத்தை போடுவதற்கு முன்பு இதை செய்ய மறவாதீர்கள்!

Fixed Deposit: பணத்தை போடுவதற்கு முன்பு இதை செய்ய மறவாதீர்கள்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

Fixed deposit fd : உங்களுக்கு பிறகு அந்த சேமிப்பு உங்கள் குடும்பத்தாரை சென்று சேர்வது கடினமான ஒன்றாக மாறி விடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நிலையான வைப்பு நிதி என்று அழைக்கப்படும் பிக்சட் டெபாசிட் (fixed deposit) திட்டத்தில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. நல்ல வட்டி, பணத்திற்கு முழு உத்தர்வாதம் போன்ற காரணங்களால் பலரும் இதை நாடி செல்கின்றனர். முக்கியமாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்திற்குப் பிறகு தேவைகளை பூர்த்தி செய்ய பல பிக்சட் டெபாசிட் திட்டங்கள் கைக்கொடுக்கின்றன. இவை வட்டி அடிப்படையில் வழக்கமான பணத்தை பெறுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.இப்படி பிக்சட் டெபாசிடின் நன்மைகளை மனதில் கொண்டு அதில் முதலீடு செய்பவர்கள் இங்கு ஏராளம்.

அதே நேரம், திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்கவும், படிவத்தை நிரப்பவும் எப்போதும் மறந்து விடாதீர்கள். அப்போது தான் உங்களுக்கு முழு பயனும் கிடைக்கும். அதாவது, பெரும்பாலனோர் குடும்பத்திற்காக பிக்சட் டெபாசிட் திட்டம் போன்ற பலவகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்களில் பணத்தை சேமிக்கின்றன. அதன் முழு பயன் நீங்கள் இல்லாத போதும் உங்கள் குடும்பத்திற்கு போய் சேர வேண்டாமா? அப்படி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பலரும் செய்யும் தவறு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க.. Sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இந்த வசதிக்கு மட்டும் சேவை கட்டணம் இல்லை!

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதிர்ச்சிக்கு முன்னர், டெபாசிட்டர் இறந்து விட்டால் அவரின் சேமிப்பு யாரை சென்று சேரும், அதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்க போகிறோம். பிக்சட் டெபாசிட் திட்டம் மட்டுமில்லை நிதி நிறுவனங்கள், போஸ்ட் ஆபீஸ், வங்கி போன்றவற்றில் சேமிக்கும் திட்டங்களில் எப்போதுமே நாமினி பெயரை பெயரை குறிப்பிட தவறாதீர்கள். இல்லையெனில் உங்களுக்கு பிறகு அந்த சேமிப்பு உங்கள் குடும்பத்தாரை சென்று சேர்வது கடினமான ஒன்றாக மாறி விடும்.

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் நபர், முதிர்ச்சிக்கு முன்னரே எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவரின் அசல் தொகை வட்டியுடன் அவர் நாமினியாக குறிப்பிட்டவருக்கு போய் சேரும்.அதற்கு டெபாசிட்டரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவரது அடையாளச் சான்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் மட்டுமே டெபாசிட்டரின் இறப்புக்குப் பிறகு பிக்சட் டெபாசிட் தொகையை நாமினி கோர முடியும்.ஒருவேலை நாமினி பெயரை படிவத்தில் குறிப்பிடாமல் இருந்தால், அவரின் குடும்ப உறுப்பினர் அந்த பணத்தை பெறுவதற்கு டெபாசிட்டரின் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை சமர்பிக்க வேண்டும் பின்பு . இந்த தொகை அனைத்து சட்ட வாரிசுகளுக்கும் சம விகிதத்தில் வழங்கப்படும்.

இதையும் படிங்க.. EPFO : அவசர தேவைக்கு PF கணக்கில் ரூ.1 லட்சம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

ஒருவேலை அந்த டெபாசிட்டர் ஜாயிண்ட் அக்கவுண்டில் பிக்சட் டெபாசிட் கணக்கை தொடங்கி இருந்தால் கூட்டுக் கணக்கின் வகையைப் பொறுத்து பணத்தை ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். எனவே, பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு படிவத்தை நிரப்புங்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Fixed Deposit, Savings