முகப்பு /செய்தி /வணிகம் / FIXED DEPOSIT: வட்டி விகிதம் மாறியாச்சு.. நோட் பண்ணிக்கோங்க!

FIXED DEPOSIT: வட்டி விகிதம் மாறியாச்சு.. நோட் பண்ணிக்கோங்க!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

FIXED DEPOSIT FD : பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ.

  • Last Updated :

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்கோ விகிதத்தின் அடிப்படை புள்ளியை 40 ஆக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் கடன் மற்றும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில், பந்தன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பிக்சிட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

கோடக் மஹிந்திரா பேங்க் 390 நாட்கள் மற்றும் 23 மாதங்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை முறையே 30 அடிப்படை புள்ளிகள் மற்றும் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பந்தன் வங்கி ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரையிலான டெபாசிட்கள் மற்றும் 18 மாதங்களுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, ரூ.10 கோடிக்கும் மேல் ரூ.50 கோடி வரையிலான உள்நாட்டு டேர்ம் டெபாசிட்கள் மற்றும் என்ஆர்ஓ டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மே 6ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளின் மாற்றி அமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - ஆண்டு வட்டி விகிதம் 2.90 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை, வயது உட்பட கடன் வாங்குபவரின் சுயவிவரத்தைப் பொறுத்தது.

அட்சய திரிதியை அன்று ரூ.15,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.80 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை

180 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 4.40 சதவிகிதத்திலிருந்து 4.50 சதவிகிதம்

1 ஆண்டு - 5 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதம் வரை

1 மற்றும் 2 ஆண்டுகளுக்கு இடையில் - 5 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதம் வரை

பேங்க் ஆப் பரோடாவில் ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரையிலான (புதிய மற்றும் புதுப்பித்தல்) உள்நாட்டு டேர்ம் டெபாசிட் மற்றும் என்ஆர்ஓ டெபாசிட்டுகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ..

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை- ஆண்டுக்கு 3.25 சதவீதம்

15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.50 சதவீதம்

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.50 சதவீதம்

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை-3.75 சதவீதம்

181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை - 4 சதவீதம்

271 நாட்கள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவானது - 4.25 சதவீதம்

ஓராண்டு - 5.05 சதவீதம்

ஓராண்டுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை - 5.05 சதவீதம்

2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை - 5.10 சதவீதம்

3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை - 4.50 சதவீதம்

டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்!

மே 5, 2022 முதல் (ஆண்டுக்கு) ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 2 கோடிக்கு மேல் ரூ.5 கோடி வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ:

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 2.75 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 2.75 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3 சதவீதம்

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3 சதவீதம்

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு -3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்

271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 4 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொதுமக்களுக்கு - 4 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்

1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்

390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.60 சதவீதம்

18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.65 சதவீதம்

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொதுமக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொதுமக்களுக்கு - 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.80 சதவீதம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொதுமக்களுக்கு - 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.80 சதவீதம்

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bank, Bank of Baroda, Fixed Deposit, ICICI Bank