முகப்பு /செய்தி /வணிகம் / Fixed Deposit : அதிக வட்டி கிடைக்க இந்த 3 வங்கியை தேர்வு செய்யுங்கள்!

Fixed Deposit : அதிக வட்டி கிடைக்க இந்த 3 வங்கியை தேர்வு செய்யுங்கள்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

Fixed Deposit fd latest: பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்படுவது ஏன் தெரியுமா?

நடுத்தர மக்கள் மற்றும் வெகுஜன மக்களின் முதலீட்டுத் தேர்வுகளில் முதன்மையானதாக இருப்பது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். இதில் லாபம் சற்று குறைவானது என்றாலும் கூட, நாம் செய்யும் முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது என்பதே இதை பலரும் தேர்வு செய்யக் காரணமாக இருக்கிறது.

குறிப்பாக, மூத்த குடிமக்கள் பலரும் பிக்சட் டெபாசிட்  திட்டங்களில் முதலீடு செய்வதைத் தான் அதிகம் விரும்புகின்றனர். இது மட்டுமல்லாமல், உழைத்து சேமித்த பணத்தை முதலீடு செய்கையில் ரிஸ்க் எடுப்பதை விரும்பாத பலரும் இதைத்தான் தேர்வு செய்கின்றனர்.

இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!

வாடிக்கையாளர் செய்யும் மூலதன முதலீட்டுத் தொகை எவ்வளவு, திட்டத்தில் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கின்றனர் என்பதைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. ஆகவே, முதலீடு செய்வதற்கு முன்பாக ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு வட்டி வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் வழங்கப்படும் வட்டி

ரூ.2 கோடிக்கும் குறைவான தொகையில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டித் தொகையை ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகரித்துள்ளது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு 2022 ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுகளைப் பொருத்து 2.50 சதவீத வட்டி முதல் 5.60 சதவீத வட்டி வரை ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.

கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.. 1 லட்சத்திற்கு இவ்வளவு தான் ஈஎம்ஐ!

எஸ்பிஐ வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் கால அளவுகளைப் பொருத்து உங்கள் முதலீட்டிற்கு 2.9 சதவீத வட்டி முதல் 5.5 சதவீத வட்டி வரையில் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இதே முதலீடுகளுக்கு 3.4 சதவீதம் முதல் 6.30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலில் இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதம்

ஐசிஐசிஐ வங்கியிலும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுகளைப் பொருத்து பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு 2.50 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் 2022 ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலில் இருக்கிறது.

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்படுவது ஏன்?

பணவீக்கத்தின் அளவைப் பொருத்து வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் மாறுபடுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் சமயங்களில் வட்டி விகிதமும் அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் சமயத்தில், எதிர்காலத்தில் இதே பணத்திற்கான வாங்கும் திறன் குறைவதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank accounts, Fixed Deposit