Home /News /business /

Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பமா? நீங்கள் இந்த வங்கிகளுக்கு செல்வது பெஸ்ட் சாய்ஸ்!

Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பமா? நீங்கள் இந்த வங்கிகளுக்கு செல்வது பெஸ்ட் சாய்ஸ்!

ஃபிக்சட் டெபாசிட்

ஃபிக்சட் டெபாசிட்

Fixed Deposit fd interest : ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்ட்டை திறக்க அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்றை அப்டேட் செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான குறுகிய கால வைப்புத் தொகையை தேர்வு செய்யலாம்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) வட்டி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது, ​​ரெப்போ ரேட் (Repo Rate) ஆனது வரலாறு காணாத அளவிற்கு குறைந்து 4 சதவீதத்தில் உள்ளது, இது கடந்த மே 2020 முதல் மாறவில்லை.

    இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் அதிர்ஷ்டவசமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் எச்டிஎஃப்சி போன்ற தேசிய வங்கிகள் உட்பட சில நிதி நிறுவனங்களின் ஃபிக்சட் டெபாசிட் விகிதங்கள் சிறிய அளவில் உயர்ந்தன. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? ஆம் எனில் எந்த வங்கியுடன் இணைய வேண்டும் என்கிற விவரங்கள் இதோ:

    புதிய முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி ஃபிக்சட் டெப்பாசிட் விகிதம் உயர்ந்தது!

    எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் உயரும் வாய்ப்பு இருப்பதால், வட்டி விகிதங்களுக்கான அளவுகோலாக செயல்படும் இந்தியாவின் ஜி-செக் ரேட் (G-Sec Rate) ஏற்கனவே ஜனவரி 3, 2022 அன்று 6.46 சதவீதத்திலிருந்து ஜனவரி 27, 2022 அன்று 6.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க.. திருமணமானவர்கள் கவனத்திற்கு..புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க இதையெல்லாம் செய்ய வேண்டும்!

    இதனால், வங்கிகள் ஃபிக்சட் டெப்பாசிட்டிற்க்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிகள் இடைவிடாமல் வட்டி விகிதங்களைக் குறைத்து வருவதால், பல ஆண்டுகளாக குறைந்த வட்டி விகிதத்தில் சிக்கித் தவிக்கும் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி ஆகும்.

    கடந்த இரண்டு வாரங்களாக எச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), இன்டஸ்லேண்ட் வங்கி, ஐடிபிஐ வங்கி போன்ற பல்வேறு வங்கிகள் பல்வேறு ஃபிக்சட் டெபாசிட் காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. மற்ற வங்கிகளும் விரைவில் இதைப் பின்பற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

    எஸ்பிஐ வங்கி, 2 ஆண்டுகளுக்கும் மேலான டெப்பாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 2 - 3 ஆண்டு கால நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் முந்தைய 5.10 சதவீதத்திலிருந்து 5.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2 - 5 ஆண்டு கால ஸ்டாண்டர்ட் ஃபிக்சட் டெபாசிட்டிற்க்கான வட்டி விகிதங்கள் 15 பேஸிஸ் பாயிண்ட்ஸ் உயர்த்தப்பட்டு 5.45 சதவீதமாக உள்ளது. 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர டெப்பாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன.

    எச்டிஎஃப்சி வங்கி

    எச்டிஎஃப்சி வங்கி ஓராண்டு கால நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 5 சதவீதமாகவும், 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 5.45 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளது. திருத்தப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 14, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இன்டஸ்லேண்ட் வங்கி

    பிப்ரவரி 16, 2022 முதல் நடைமுறைக்கு வந்த பல்வேறு காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இன்டஸ்லேண்ட் வங்கி 25 பேஸிஸ் பாயிண்ட்கள் உயர்த்தியுள்ளது. 180 நாட்கள் வரை என்கிற காலத்திற்கான வட்டியையும் இந்த வங்கி திருத்தியுள்ளது.

    ஐடிபிஐ வங்கி

    தனியார் வங்கியான ஐடிபிஐ, அதன் நீண்ட கால வைப்பு வட்டி விகிதங்களை 25 பேஸிஸ் பாயிண்ட்கள் உயர்த்தியுள்ளது மற்றும் மீதமுள்ள தவணைக் காலங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் இல்லை.

    பெடரல் வங்கி

    இந்த வங்கி ஃபிக்சட் டெபாசிட்களில் ஆண்டுக்கு 2.50 சதவீதம் முதல் ஆண்டுக்கு 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்ட்டின் காலம் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கலாம். மூத்த குடிமக்கள் அதிக வட்டி விகிதத்திற்கான தகுதியை பெறுவர். இந்த திருத்தங்கள் மற்றும் புதிய விகிதங்கள் 17-02-2022 முதல் அமலுக்கு வந்தன.

    முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

    புதிய ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்ட்டை திறக்க அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்றை அப்டேட் செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான குறுகிய கால வைப்புத் தொகையை தேர்வு செய்யலாம். இதனால் உங்கள் பணம் நீண்ட காலத்திற்கு குறைந்த வட்டி விகிதத்துடன் போராடாது. மேலும் குறுகிய கால மற்றும் நடுத்தர கால வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, ​​உங்கள் ஃபிக்சட் டெபாசிட்களின் விதிமுறைகளை நீங்கள் நீட்டிக்க ஆரம்பிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி