Home /News /business /

FIXED DEPOSIT : இந்த வங்கியில் 500 நாட்கள் டெபாசிட் செய்தாலே அதிக வட்டி! 

FIXED DEPOSIT : இந்த வங்கியில் 500 நாட்கள் டெபாசிட் செய்தாலே அதிக வட்டி! 

வணிகம்

வணிகம்

Fixed Deposit Schemes : IDBI வங்கியின் ‘அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால வைப்புத்தொகை’ திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக சாதாரண டெபாசிட்களை விட 6.70% வரை அதிக வட்டி கிடைக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஃபிக்சட் டெபாசிட் என்பது வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைப்பது, அப்படி முதிர்வு காலம் வரை வைக்கப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது, ஏதாவது காரணத்திற்காக பணத்தை பாதியில் எடுக்க நேர்ந்தால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

    சமீபத்தில் பல வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை அதிகப்படுத்திய நிலையில், தற்போது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ஐடிபிஐ வங்கி புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றிணை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால வைப்புத்தொகை’ என்ற லிமிடெட் பீரியட் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை (FDs) ஐடிபிசி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

    குழந்தைகள் ஈட்டும் வருமானத்துக்கும் வரி உண்டு... எப்படி கணக்கிடப்படுகிறது என்று தெரியுமா?

    இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 500 நாட்கள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக சாதாரண டெபாசிட்களை விட 6.70% வரை அதிக வட்டி கிடைக்கும். ‘அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால வைப்புத்தொகை’ திட்டத்தில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணையலாம் என காலஅவகாசமும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தைப் பற்றித் ஐடிபிஐ வங்கி தெரிவித்திருப்பது “ஐடிபிஐ வங்கியின் அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால டெபாசிட்டுகளுடன் உச்ச வட்டி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முந்துங்கள்! ஆஃபர் 30 செப்டம்பர், 2022 வரை மட்டுமே”

    இந்தத் திட்டம் முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்பப் பெறக்கூடிய டெபாசிட்களுக்கு 6.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் முதிர்வு காலம் வரை திரும்ப பெற முடியா ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.20 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

    கடன் பெற சிபில் ஸ்கோர் முக்கியம்.. அதை இலவசமாக செக் செய்யலாம் தெரியுமா?

    மற்ற FD திட்டங்களைப் போலவே, இத்திட்டத்தில் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்ப பெறக்கூடிய டெபாசிட்களுக்கு 6.60 சதவீதமும், முதிர்வு காலம் முடியும் வரையும் திரும்ப பெற இயலாத டெபாசிட்களுக்கு 6.70 சதவீதம் வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.

    மூத்த குடிமக்களுக்கான பயன்கள்:

    ஐடிபிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு வைப்புத் திட்டங்களில் சாதாரண வட்டி விகிதங்களை விட 0.75% கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

    அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால வைப்புகளுக்கான விதிகள்:

    1. முதிர்வு காலம் நிறைவடையும் வரை வாடிக்கையாளரால் பணத்தை திரும்ப பெற முடியாது.

    2. நமன் சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கான வட்டி விகிதம் அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால டெபாசிட் திட்டத்திற்கு பொருந்தாது.

    3. ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் விகிதங்கள் NRO & NRE கால வைப்புகளுக்குப் பொருந்தாது.

    4. டெர்ம் டெபாசிட் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மற்ற அனைத்து அம்சங்களும் மாறாமல் இருக்கும் மேலும் மேற்கண்ட திட்டத்திற்கும் பொருந்தும்.

    மேலும், திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முதிர்வு காலத்தைப் பொறுத்து பல்வேறு FD களில் டெர்ம் டெபாசிட் மீதான வட்டி விகிதங்களையும் வங்கி திருத்தியுள்ளது. ஐடிபிஐ வங்கி சமீபத்தில் தனது 1100 நாட்களுக்கான அம்ரித் மஹோத்சவ் எஃப்டியை ஆகஸ்ட் 22, 2022 அன்று நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி