ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஜாலியோ ஜிம்கானா.. பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

ஜாலியோ ஜிம்கானா.. பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய மூன்று வங்கிகள் ரூ. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

 • Trending Desk
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்தது. கொரோனா பரவல், ரஷ்யா - உக்ரன் போர் போன்ற காரணங்களால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மே மாதத்திலிருந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. ரெப்போ விகித உயர்வால் வங்கிகள் டெபாசிட்கள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டின் மீதான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளன.

  நிலையான வைப்புத் தொகைகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும். நீங்கள் குறுகிய காலம் முதல் நீண்ட கால வைப்பு நிதிக் கணக்கில் பணம் சேமிக்கலாம். ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அரசு வங்கி, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்து வகையான நிறுவனங்களுமே வழங்குகின்றன.

  சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய மூன்று வங்கிகள் ரூ. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்...

  ஐசிஐசிஐ வங்கியின் FD வட்டி விகிதங்கள் (ரூ. 2 கோடிக்குக் கீழ்):

  15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.25 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  Digital currency : ஆசையும் ஆர்வமும் மட்டும் இருந்தா போதாது.. டிஜிட்டல் கரன்சி பற்றி இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

  121 நாட்கள் முதல் 150 நாட்கள், 151 முதல் 184 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  185 நாட்கள் முதல் 210 நாட்கள், 211 முதல் 270 நாட்கள், 271 நாட்கள் முதல் 289 நாட்கள், 290 முதல் 1 வருடம் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.40 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  1 வருடம் முதல் 389 நாட்கள், 390 நாட்கள் முதல் 15 மாதங்கள், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் ஆகிய 4 வகையான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 5.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  2 வருடம் முதல் 389 நாட்கள், 390 நாட்கள் முதல் 15 மாதங்கள், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் ஆகிய 4 வகையான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 5.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 6.60 சதவீதமும் வட்டி கிடைக்கும்.

  5ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 6.60 சதவீதமும் வட்டி கிடைக்கும்.

  5 ஆண்டுகளுக்கு மேம் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 6.60 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  கோடக் மஹிந்திரா வங்கி FD வட்டி விகிதங்கள் (ரூ. 2 கோடிக்குக் கீழ்):

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 2.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.15 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்.ஐ.சியில் இந்த பாலிசியை எடுப்பது அவ்வளவு நல்லது!

  31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலும் சேமிக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு 5.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலும், 121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு 3.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.25 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  180 நாட்கள், 181 நாட்கள் முதல் 269 நாட்கள் மற்றும் 270 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.50 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு: 5.75 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  364 நாட்கள், 365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 5.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  390 நாட்கள் (அதாவது 12 மாதங்களுக்கு மேல் 25 நாட்களைக் கடந்த) ஃபிக்சட் டெபாசிட்களுக்கு தனிநபருக்கு 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு: 6.60 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது

  391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான FD-க்கு 6.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.60 சதவீதம்

  23 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு - பொது மக்களுக்கு: 6.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.70 சதவீதம்

  23 மாதங்களுக்கு மேல் 2 வருடங்கள் வரையிலான டெபாசிட்டிற்கு 6.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.70 சதவீதம்

  2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 6.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.70 சதவீதம்

  3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவான FD-க்கு 6.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.60 சதவீதம்

  4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவான FD-க்கு 6.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.60 சதவீதம்

  5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகளுக்குட்பட்ட குறைவான FD-க்கு 6.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.60 சதவீதம்.

  HDFC வங்கி FD வட்டி விகிதங்கள் (ரூ.2 கோடிக்கு கீழ்):

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் மற்றும் 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 2.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.25 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  30 நாட்கள் முதல் 45 நாட்கள் மற்றும் 46 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 3.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.25 சதவீதமும் வட்டியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  6 மாதங்களுக்கு மேல் 9 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 4.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.15 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  ஓராண்டு, ஓராண்டுக்கும் அதிகமானது முதல் 2 ஆண்டுகள் வரை, 2 ஆண்டுகளுக்கும் அதிகமானது முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 5.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகளுக்கும் அதிகமானது முதல் 5 ஆண்டுகள் வரையிலும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமும்

  5 ஆண்டுகளுக்கும் அதிகமானது முதல் 10 ஆண்டுகள் வரையிலும் 2 கோடிக்கும் குறைவாக சேமிக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 5.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Fixed Deposit, Savings