ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆன்லைனில் ஷாப்பிங்கில் அதிகரிக்கும் மோசடிகளும்.. தடுக்கும் வழிமுறைகளும் - முழு விபரம்!

ஆன்லைனில் ஷாப்பிங்கில் அதிகரிக்கும் மோசடிகளும்.. தடுக்கும் வழிமுறைகளும் - முழு விபரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வங்கிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை இணையப் பயன்பாட்டின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதிலும் ஆன்லைன் வாயிலாக மற்றவர்களுக்குப் பணம் அனுப்புவது முதல் ஷாப்பிங் செய்யும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ள அதே சமயத்தில் இணைய மோசடிகளும் ஒரு புறம் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வங்கிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். குறிப்பாக வங்கிகள் எப்போதும் ஓடிபி கேட்காது எனவும், ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது கவனமுடன் செய்ய வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

இருந்த போதும் தற்போது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கைச் சார்ந்து இருப்பதால், மோசடி செய்பவர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையும் கொடுத்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கை அதிகரிக்கிறது. எனவே இதுப் போன்ற சூழலில், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவனமுடன் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதோ என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

ஆன்லைனில் ஷாப்பிங் மோசடியைத் தவிர்க்கும் வழிமுறைகள்:

பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்துதல்:ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நாம் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளே நுழைய நேரிடும். ஆனால் சில நேரங்களில் நம்முடைய பாஸ்வேட் மறந்து விடுவதால் நாம் ஆன்லைனில் சென்று மீட்டெடுக்க முயற்சி செய்வோம். அந்த நேரங்களில் ஆன்லைன் மோசடிகள் ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே ஒவ்வொரு வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக கடவுச்சொல் அதாவது பாஸ்வேட் இல்லாமல் பயோமெட்ரிக் முறையை நடைமுறைப் படுத்தியுள்ளனர். இதன் மூலம் நம்முடைய மொபைலை வைத்து யாரும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முடியாது. இது பாதுகாப்பாக இருப்பதோடு பெருமளவு மோசடியைத் தவிர்க்கும் வகையில் உள்ளது.

அடுத்தப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,remote access தான். அதாவது நீங்கள் உங்களது நண்பர்கள் அல்லது மற்றவர்களிடம் ரிமோட் அசஸ் மூலம் மொபைல் அல்லது லேப்டாப்பை சரி செய்யக் கொடுத்தல் அல்லது ஏதாவது ஒரு தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு கொடுக்கும் போது, remote access மூலம் ஸ்கிரீன் ரெக்கார்டரைப் பயன்படுத்தி உங்களது மின்னஞ்சல்,கடவுச்சொல், வங்கிக்கணக்கு உள்நுழைவு விபரங்கள்மற்றும் தொலைப்பேசியை குளோன் செய்ய வாய்ப்புகள் உள்ளது. எனவே இனி ரிமோட் அசஸ் செய்ய வேண்டாம்.

நீங்கள் எப்போதும் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்தாலும் அதை நீங்களே மேற்கொள்ளவும். மற்றவர்களுக்கு ஒடிபியை நீங்கள் ஷேர் செய்யக்கூடாது. இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறும். எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

மற்றொரு முக்கியமான விஷயம் நீங்கள் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது வைஃபை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகளும் நமக்கு வைஃபை பயன்படுத்துகிறீர்களா? என நமக்கு எச்சரிக்கை கேள்வியை எழுப்பும். எனவே வைஃபைத் தவிர்த்து மொபைல் நெட்வொர்க்கில் நீங்கள் ஆன்லைன் சேவையை மேற்கொள்ளலாம். அங்கீகரிக்காத பரிவர்த்தனை பாப் அப் செய்யும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 26% உயர்வு - இதுவரை 13.69 லட்சம் கோடி வசூல் என தகவல்

தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் நடைபெறும் மோடிசகளைத் தவிர்க்க, இந்தியாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Online shopping, Scam