ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீ விபத்து இன்சுரன்ஸ் பாலிசி.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

தீ விபத்து இன்சுரன்ஸ் பாலிசி.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

மாதிரிப்படம்..தீ காப்பீட்டு இன்சுரன்ஸ்…

மாதிரிப்படம்..தீ காப்பீட்டு இன்சுரன்ஸ்…

தீயினால் ஏற்படும் உங்களது சொத்துக்களுக்கு ஏதேனும் பெரும் சேதம் ஏற்பட்டால் தீ காப்பீடு இன்சுரன்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீப ஒளித்திருநாள் அதாவது தீபாவளி ஒவ்வொருவர் வீட்டிலும் ஒளியை ஏற்படுத்தும் விதமாகப் பார்க்கப்படுகிறது. காலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து புத்தாடை அணிந்து மகாலட்சுமி தேவியை வழிபடும் ஐதீகத்தோடு பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாளும் இது தான்.

  என்னதான் பாதுகாப்போடு தீபாவளியைக் கொண்டாடினாலும் இத்திருநாளில் பட்டாசுகள் வெடிப்பதால் எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளும் அரங்கேறக்கூடும். குறிப்பாக கடந்தாண்டு டெல்லியில் தீ விபத்து தொடர்பாக 200 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ள நிலையில், பாதுகாப்போடு எவ்வித விபத்தும் இல்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எழக்கூடும்.

  இந்நேரத்தில் அனைவரும் தீ காப்பீடுத் திட்டம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே தீ காப்பீடு என்றால் என்ன? யாரெல்லாம் இன்சுரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  Read More : குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் பெறலாம்.. அமலுக்கு வரும் புதிய திட்டம்!

  தீ காப்பீட்டு இன்சுரன்ஸ்…

  தீயினால் ஏற்படும் உங்களது சொத்துக்களுக்கு ஏதேனும் பெரும் சேதம் ஏற்பட்டால் தீ காப்பீடு இன்சுரன்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் புகை, வெப்பம் அல்லது தீயினால் ஏற்படும் பாதிப்புகள், தீயினால் கூரைகள் சேதமடைவது, உங்களது பொருள் இழப்புகள் தீயினால் மட்டும் இருக்க வேண்டும் மற்றும் தீ விபத்து தற்செயலாக இருக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் இவற்றிற்கு மட்டும் தான், நீங்கள் காப்பீடு பெற முடியும்.

  இதனை வணிக நிறுவனங்கள் மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. தீ விபத்தினால் சொத்துக்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் எந்தவொரு தனிநபர், அமைப்பு, நிறுவனம் போன்ற யார் வேண்டுமானாலும் இன்சுரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள முடியும்.

  தீ இன்சுரன்ஸ் எடுக்கும் போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்:

  தீ இன்சுரன்ஸைப் பொறுத்தவரை மதிப்புமிக்க கொள்கை, குறிப்பிட்ட கொள்கை, சராசரி கொள்கை, ப்ளாடிங் பாலிசி, மாற்று பாலிசி என பல வகைகளில் உள்ளதால் உங்களுக்கு எது தேவையோ? அதை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
  பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்கள் என இரு தரப்பினரும் ஒரு நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டியது அவசியம். 
  தீ விபத்து தொடர்பான அனைத்து முழுமையான உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
  முக்கியமாக தீ காப்பீடு, மற்ற காப்பீட்டுக் கொள்கையைப் போலவே, இழப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தான் இயங்கிவருகிறது.
  தீ விபத்து ஏற்பட்டாலும் இழப்பு எதுவும் இல்லையென்றால் இன்சுரன்ஸ் கவரேஜ் உங்களுக்குக் கிடைக்காது. இதோடு சொத்துக்கள் மற்றும் பொருள்கள் சேதமடைந்ததற்கானக் காரணம் தீயாக இருந்தால் மட்டுமே ஒருவர் காப்பீட்டுத் தொகையைப் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
  இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் தீ விபத்து காப்பீடு இன்சுரன்ஸ் திட்டத்தில் பின்பற்றப்படுகிறது. எனவே உங்களின் நிறுவனங்கள் அல்லது பிற சொத்துக்கள் தீயினால் சேதமடையும் சூழல் ஏற்பட்டால் அனைவரும் தீ காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று.
  குறிப்பாக தீபாவளி நேரங்களில் நிச்சயம் அனைவருக்கும் தேவையான பாலிசி திட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Fire accident, Insurance