ஜூலை 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி அலுவலகத்தில் சென்று வருமான வரி கணக்குகளை செலுத்தலாம் .

Web Desk | news18
Updated: July 23, 2019, 7:29 PM IST
ஜூலை 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்
கோப்பு படம்
Web Desk | news18
Updated: July 23, 2019, 7:29 PM IST
2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என வருமானவரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக வருமானவரித்துறை ஆணையர் ரங்கராஜ், தனிநபர் வருமானம், வீட்டு வாடகை மூலம் வருமானம் பெறுபவர்கள் ஜூலை 31க்குள் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும் எனதெரிவித்தார்.

அதன்படி 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் பெறுபவர்கள் டிசம்பருக்குள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.  5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி அலுவலகத்தில் சென்று வருமான வரி கணக்குகளை செலுத்தலாம் எனக்கூறினார்.

நடப்பு வருவாய் ஆண்டில் 92,500 கோடி ரூபாய் வருமான வரிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரங்கராஜ் கூறினார்.

Also Watch

Loading...

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...