ரிசர்வ் வங்கியிடம் ரூ.27,380 கோடி கேட்கும் மத்திய நிதி அமைச்சகம்!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நிதி ஆண்டும் உபரி வருமானத்தில் அவசர கால நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை பராமரித்து வருகிறது.

Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 1:39 PM IST
ரிசர்வ் வங்கியிடம் ரூ.27,380 கோடி கேட்கும் மத்திய நிதி அமைச்சகம்!
நிதி அமைச்சகம்
Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 1:39 PM IST
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி தொகையிலிருந்து 27 ஆயிரத்து 380 கோடியை மத்திய அரசுக்குக் கொடுக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாக மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நிதி ஆண்டும் உபரி வருமானத்தில் அவசர கால நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை பராமரித்து வருகிறது.

2016-17-ம் நிதி ஆண்டில் 13 ஆயிரத்து 190 கோடியும், 2017-18 நிதி ஆண்டில் 14 ஆயிரத்து 190 கோடியும் சேமிப்பாக வைத்துள்ளது. இந்த இரண்டும் சேர்த்து மொத்தமாக ரிசர்வ் வங்கியிடம் உள்ள 27 ஆயிரத்து 380 கோடி உபரி நிதியை அரசுக்கு வழங்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.

மத்திய அரசு, ஆர்பிஐ இடையில் உபரி தொகை பெறுவது குறித்து ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் உள்ளன. முன்னாள் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு மத்திய அரசு கேட்ட உபரி தொகையை அளிக்க முடியாது என்று கூறியதால் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்பட்டது.

மேலும் படிக்க:
வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...