• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கஜா பாதித்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

கஜா பாதித்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

இது ஜிஎஸ்டி வசூல் ஆண்டு இறுதி கணக்கை நிறுவனங்கள் செய்ததால் தான் அதிகமாக உள்ளது. வரும் மாதம் மீண்டும் ஜிஎஸ்டி வசூல் குறைய வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது ஜிஎஸ்டி வசூல் ஆண்டு இறுதி கணக்கை நிறுவனங்கள் செய்ததால் தான் அதிகமாக உள்ளது. வரும் மாதம் மீண்டும் ஜிஎஸ்டி வசூல் குறைய வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரி செலுத்துவோர் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செலுத்தலாம்

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், திதிலி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியை டிசம்பர் 20-ம் தேதிக்குள் செலுத்தலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரி செலுத்துவோர் வரியை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செலுத்தலாம் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: