முகப்பு /செய்தி /வணிகம் / ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படும் தகவல் உண்மையா?

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படும் தகவல் உண்மையா?

உதவி தொகை

உதவி தொகை

உதவித்தொகையை பெறுவதற்கு குடிமக்கள் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரெஜிஸ்டர் செய்வதற்கு லிங்க் ஒன்றை கிளிக் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் சார்பில் நாட்டு மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிளாக் / இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ள செய்தியில், “இந்திய மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை பரிசீலனை செய்த நிலையில், அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30,628 உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!

இந்த செய்தி உண்மையானதா?

மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் இதுபோல வெளியிடவில்லை. இந்த செய்தி போலியானதாகும். ஆனால், அந்த செய்தியில் உதவித்தொகையை பெறுவதற்கு குடிமக்கள் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரெஜிஸ்டர் செய்வதற்கு லிங்க் ஒன்றை கிளிக் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி திட்டம் குறித்து அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் 15 நண்பர்களுக்கு அல்லது 5 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அதை பார்வேர்டு செய்யுமாறு அந்த போலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை பெறுவதற்கு பெயர் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக உங்கள் லேப்டாப் அல்லது ஃபோன்களை ஹேக் செய்வதற்கான முயற்சியாக இதுபோன்ற போலி செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

FIXED DEPOSIT: வட்டி விகிதம் மாறியாச்சு.. நோட் பண்ணிக்கோங்க!

மத்திய அரசு அளித்த விளக்கம்

குடிமக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்த செய்தி உண்மையானதல்ல என்று மத்திய அரசின் பிஐபி (பிரஸ் இனஃபர்மேஷன் பீரோ) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியமைச்சகம் இதுபோல எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று பிஐபி கூறியுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் பிஐபி வெளியிட்டுள்ள செய்தியில், “சமூக ஊடகங்களில் https://bit.ly/3P7CiPY என்ற லிங்க்-ஐ குறிப்பிட்டு செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தலா ரூ.30,628 நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி போலியானது. மத்திய நிதியமைச்சகம் அதுபோல எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகளை தெரிந்து கொள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கு இடமான செய்தி ஏதேனும் வலம் வந்தால், அதன் உண்மைத் தன்மையை நீங்கள் ஆராய்ந்து கொள்ளலாம். அந்தச் செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Central govt, FINANCE MINISTRY