சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு

இந்தியர்களின் கறுப்புப்பணம் வெளிநாடுகளில் அதிகப்பட்சமாக சுமார் 490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம்.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு
மாதிரிப்பணம்
  • News18
  • Last Updated: December 23, 2019, 7:56 PM IST
  • Share this:
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி அளித்த அதே நம்பகத்தன்மையைக் காப்பதாக இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைத் தர முடியாது என நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுந்த ஒரு கேள்விக்குத்தான் இவ்வாறு நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. மேலும், இதர வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் கறுப்புப் பண விவரங்களையும் தர நிதி அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த விவரங்கள் வெளிநாட்டு அரசிடம் இருந்து பெறப்பட்டது என்பதால் அதே நம்பகத்தன்மையைக் காக்கிறதாம் அமைச்சகம்.


இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் இந்திய அரசிடம் வழங்கப்பட்டது. இதே ஒப்பந்ததின் அடிப்படையில் மொத்தம் 75 நாடுகளுக்கு இந்த விவரப் பட்டியலை சுவிட்சர்லாந்து வழங்கியது.

இந்தியர்களின் கறுப்புப்பணம் வெளிநாடுகளில் அதிகப்பட்சமாக சுமார் 490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்பது 2011-ம் ஆண்டு காங்கிரஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ‘மண்டல் கமிஷனுக்கு எதிராக ஒரு காலத்தில் போராடினேன்...’- பகிரங்க மன்னிப்புக் கேட்ட அனுராக் காஷ்யப்
First published: December 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்