பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? நிதி அமைச்சர் - பொதுத்துறை வங்கித் தலைவர்கள் ஆலோசனை!

தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் செய்ய வேண்டிய கடன் உதவிகள் குறித்தும் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? நிதி அமைச்சர் - பொதுத்துறை வங்கித் தலைவர்கள் ஆலோசனை!
நிர்மலா சீதாராமன்
  • Share this:
பொதுத்துறை வங்கி தலைவா்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனையில் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா? கடனை செலுத்த 3 மாதம் வழங்கப்பட்ட கால அவகாசத்தின் நிலவரம் என்ன? பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கி துறை தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவிதம் குறைத்தது. இது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் செய்ய வேண்டிய கடன் உதவிகள் குறித்தும் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

Also see...
First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading