ஹோம் /நியூஸ் /வணிகம் /

Exclusive : 'அனைத்து மாநிலங்களும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்' - நிர்மலா சீதாராமன்

Exclusive : 'அனைத்து மாநிலங்களும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்' - நிர்மலா சீதாராமன்

பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது ஒரு கூட்டு முயற்சி. இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு தேவை. நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

Nirmala Sitharaman Exclusive Interview: அனைத்து மாநிலங்களும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

நெட்வொர்க் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வலுப்படுத்தவும் மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் ஏற்பட வேண்டாம்.

இதையும் படிங்க : Budget 2022:விலை குறையும் பொருட்கள்.. விலை ஏறப்போகும் பொருட்கள் என்னென்ன?

அனைத்து மாநிலங்களும் முன்னேற்றப் பாதையும் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செய்யும். அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் பிரதமர் மோடி மிகத் தெளிவாக உள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்காக பொது நிதி செலவிடப்படுவதுதான் சரியானதாக அமையும். பொருளாதார வலுவாக அமைந்தால், நாம் செலவிடும் நிதி நமக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருளாதாரத்தில் பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2022: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது? விலை குறைகிறது? முழு விவரம்!!

பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது ஒரு கூட்டு முயற்சி. இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு தேவை. நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தனியார் துறை முதலீட்டிற்கு ஏற்றுமதி லாபத்தை அளிக்கும். இந்த துறையில் இன்னும் புதியவர்கள் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்னிய நேரடி முதலீடு வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2022