இந்தியா பங்கேற்காமலேயே டிஜிட்டலில் அதிகப்பேர் பார்த்த ஒரு விளையாட்டு தொடராக பிபா கால்பந்து சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் சென்று பார்த்ததை போலவே, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியிலும், டிஜிட்டல் தளங்களிலும் இந்த போட்டியை பார்த்து ரசித்தனர். நாட்டின் முன்னணி விளையாட்டு ஒளிபரப்பு நெட்வொர்க் ஆன நெட்வொர்க் 18 குழுமத்தின் Viacom18 ஸ்போர்ட்ஸ் பிபா உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்திலும் ஒளிபரப்பு செய்தது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022 பிபா உலககோப்பையை 32 மில்லியன் மக்கள்(3.2 கோடி மக்கள்) ஜியோ சினிமா வழியாக கண்டு களித்துள்ளனர். ஜியோ சினிமா மூலம் இந்த போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த போட்டியை டிவியை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது. இதன் மூலம் ஜியோ சினிமா ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.
செயலிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஆப் ஆனியின் தரவுகளின் படி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட பொழுதுபோக்கு செயலிகளில் ஜியோ சினமா ஆப் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவம்பர் மாத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட பொழுதுபோக்கு செயலிகளின் எண்ணிக்கையில் ஜியோ சினிமா ஆப் மட்டும் 29 விழுக்காடு பங்கை பிடித்துள்ளது.
மேலும், முதல் முறையாக டிவி பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் உலகக் கோப்பையில் கிடைத்துள்ளனர். BARC அமைப்பின் தரவுகளின்படி, முதல் 48 போட்டிகளிலேயே ஜியோ சினிமாவின் ரீச் 42.2 மில்லியன் அதாவது 4.2 கோடியை தாண்டியுள்ளது. தொடர் முடிந்துள்ள நிலையில் இறுதிப்போட்டி பார்வையாளர்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளி ஆகிய மொழிகள் ஜியோ சினிமா 4k தரத்தில் 64 போட்டிகளையும் வழங்கியுள்ளது.
குறிப்பாக இந்த கால்பந்து போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா பங்கேற்காமலேயே டிஜிட்டலில் அதிகப்பேர் பார்த்த ஒரு விளையாட்டு தொடராக பிபா கால்பந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஜியோ சினிமா சாத்தியமாக்கியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA World Cup 2022, Jio, Reliance Jio