ஹோம் /நியூஸ் /வணிகம் /

Festive Season Discounts: டெபிட், கிரெடிட் கார்டுகள் மீதான சிறப்பு சலுகைகள் என்னென்ன?

Festive Season Discounts: டெபிட், கிரெடிட் கார்டுகள் மீதான சிறப்பு சலுகைகள் என்னென்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தச் சலுகைகள் வங்கியின் டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இஎம்ஐ-யில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நவராத்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைன் ஸ்டோர்கள், வணிக நிறுவனங்கள், இ-காமர்ஸ் தளங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை களைக்கட்டி வருகிறது. இந்த ஆஃபர் மேளாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் களமிறங்கியுள்ளன. பணவீக்கத்தின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காகவும், எளிமையாக கடன் கிடைக்கும் வகையிலும் வங்கிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

  வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையைப் பெற விரும்புகின்றன. சமீபத்திய வாரங்களில், பெரிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கிகள் பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு பலவிதமான ஷாப்பிங் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் மற்றும் எஸ்பிஐ வழங்கும் பண்டிகைக் காலச் சலுகைகளை என்னென்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்...

  1. ஐசிஐசிஐ பேங்க்:

  ஐசிஐசிஐ வங்கி ‘ஃபெஸ்டிவ் பொனான்சா’ என்ற பெயரில் தனது வாடிக்கையாளருக்கான பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், நுகர்வோர் நிதி மற்றும் கார்ட்லெஸ் இஎம்ஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்களை பெற முடியும். இந்தச் சலுகைகள் வங்கியின் டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இஎம்ஐ-யில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

  வீடு, ஆட்டோமொபைல், டிராக்டர், தங்கம் மற்றும் இரு சக்கர வாகனங்கள், பர்சனல் லோன் உள்ளிட்ட கடன்களில் சில அற்புதமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், ஒன்பிளஸ், சாம்சங், சோனி, எல்ஜி மற்றும் வோல்டாஸ், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகள் மீது நோகாஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது.

  2. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, கடன்களுக்கான புரோசெசிங் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. கார் கடனுக்கான இஎம்ஐ ஒரு லட்சத்திற்கு ரூ.1,551 இலிருந்து தொடங்குகிறது, பர்சனல் லோன்களுக்கான இஎம்ஐ ஒரு லட்சத்திற்கு ரூ.1868லிருந்து, தங்க நகைகள் மீது பெறப்படும் கடனுக்கான இஎம்ஐ ஒரு லட்சத்திற்கு ரூ.3,134லிருந்தும் தொடங்குகிறது.

  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “SBI உடன் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நவராத்திரியின் மகத்துவத்தைக் கொண்டாடுங்கள். கார், தங்க நகைகள், பர்சனல் லோன் உள்ளிட்ட கடன்கள் மீது பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். இதனைப் பெற YONO ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது கூடுதல் விவரங்களை அறிய https://bank.sbi என்ற தளத்தை பார்வையிடவும்” என பதிவிட்டுள்ளது.

  3. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:

  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா யூனியன் ஹோம் மற்றும் யூனியன் மைல்ஸ் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணங்களை (Processing Charges) 08.08.2022 முதல் 31.01.2023 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

  4. பஞ்சாப் நேஷனல் பேங்க்:

  பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டிஜிட்டல் சேனல்கள் வழியாக ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்கு 0.05 சதவீதமும், கார் லோனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 0.1 சதவீதமும் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டுக் கடன்களைப் பெறுவதற்கு பஞ்சாப் நேஷனல் பேங்க் சட்ட மற்றும் மதிப்பீட்டுக் கட்டணங்களை வசூலிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Read More: Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்

  5. சென்ட்ரல் பேங்க்:

  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ட்வீட் படி, "இந்த நவராத்திரியில் உங்கள் கனவுகளை எங்களின் வசதியான மற்றும் குறைந்த வட்டி கடன் மூலம் நிறைவேற்றுங்கள்” என பதிவிட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bank, Credit Card, India, Online