கடன் வசூலிப்பதில் இருக்கும் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பாதுகாப்பான அல்லது குறைந்த ஆபத்து இருக்கக்கூடிய வழிகளை தேர்தெடுக்கின்றன. அதாவது, சொத்து, நகைகள் மற்றும் பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டு கடன்களை கொடுக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கடன் வசூலிப்பதில் குறைந்த ஆபத்து மட்டுமே உள்ளது. இந்த கடன்களுக்கு குறைந்த வட்டியை கொடுக்கவும் வங்கிகள் தயராக இருக்கின்றன. பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு லோன்கள் பாதுகாப்பற்ற கடன்களாகும்.
பத்திரங்கள் மீதான கடன்
பத்திரங்கள் மீதான கடன் என்பது பங்குகள், பத்திர ஆவணங்கள், இ.டி.எப், மியூச்சுவல் பன்ட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றின் மீது வழங்கப்படுகிறது. இதனை வைத்து கடன் பெறுபவர்கள் வட்டி மற்றும் டிவிடென்ட், போனஸை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்கள் மீது கொடுக்கப்படும் கடன் என்பது கடன் கொடுப்பவரின் விருப்பதுக்குரியது. அவர்கள் உங்கள் பத்திரங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து, திரும்ப பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, கேட்கும் தொகையில் அவர்களால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை முடிவு செய்வார்கள். பெரும்பாலும் ஓவர்டிராப்ட் முறை மூலம் ஆவணங்கள் மீது கடன் கொடுக்கப்படுகிறது. கடன் வாங்குபவர்கள் தங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதை தேர்தெடுக்கலாம். ஆணவங்கள் மீது கடன் வாங்கினாலும், கடன் வாங்குபவர் தொடர்ந்து வட்டி செலுத்த வேண்டும்.
தங்க நகைக்கடன்
தங்கத்தின் மீது உடனடியாக கடன் கிடைத்துவிடும். பெரும்பாலான நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஒரே நாளில் நகைகள் மீது கடன் கொடுக்கின்றன. அடமானம் வைக்கப்படும் நகையின் மதிப்பை பொறுத்து கடன் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 2 முதல் 3 வருடங்களும், அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை நகைக் கடனுக்கான காலவரம்பு கொடுக்கப்படுகிறது. ஒரு சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வட்டியை மட்டும் பெற்றுக்கொள்கின்றன. எப்போது வேண்டுமானாலும் கடன் தொகையை திருப்பி செலுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை கொடுப்பதால் பலருக்கும் நகைக்கடன் விருப்பத் தேர்வாக உள்ளது. மேலும், கடனை திருப்பி செலுத்த இ.எம்.ஐ ஆப்சனும் கொடுக்கப்படுகிறது
சொத்து அடமானக் கடன்
சொத்து அடமானக் கடன் என்பது அடுக்குமாடி குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை சார்ந்து கொடுக்கப்படுகிறது. அடமானம் வைக்கும் சொத்தின் சந்தை மதிப்பில் இருந்து 50 முதல் 70 விழுக்காடு வரை கடன் தொகையை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. திருப்பி செலுத்தும் கால அளவானது 15 முதல் 20 வருடங்கள் கொடுக்கப்படுகின்றன. குறைவான வட்டி விகிதத்தில், நீண்ட நாட்களுக்கான இ.எம்.ஐ - கடன் வாங்குபவர்கள் தேர்தெடுத்துக்கொள்ளலாம். கடன் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. இந்த முறையில் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் குறைந்தது 3 வாரங்கள் முதல் ஒன்றரை மாதங்கள் வரை எடுக்கும்
டாப் -அப் வீட்டுக்கடன்
ஏற்கனவே வீட்டுக்கடன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் வாங்கிய ஹோம் லோனுக்கு முறையாக தவணைகளை செலுத்தி வந்தால், வங்கிகளே நேரடியாக அழைத்து உங்களுக்கான டாப் அப் லோன் குறித்து விளக்குவார்கள். நிலுவையில் இருக்கும் தவணை தொகையை கருத்தில் கொண்டு டாப் அப் லோன் தொகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் மாத தவணை தொகை செலுத்துவது கடினமாக இருந்தால், அதனை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ள வாய்ப்பும் டாப் அப் லோன் எடுக்கும்போது கடன் வழங்குபவர்களால் கொடுக்கப்படுகிறது. இந்த லோனுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் சம்மதம் அதே நாளில் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
முடிவு
உத்தரவாத கடனில் வீட்டுக்கடனில் டாப் அப் செய்துகொள்வது மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை மிக குறைந்த அளவில் வழங்கி வருகின்றன. மற்ற கடன்கள் சந்தை மதிப்பு மற்றும் தவணை நிலுவை ஆகியவற்றை பொறுத்து கொடுக்கப்படுகிறது. டாப் அப் லோன்களுக்கு சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட கட்டடணங்கள் வசூலிக்கப்படாது. சொத்து அடமானக் கடன்களுக்கு ஒவ்வொரு முறையும் பல்வேறு அடிப்படை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Loan, Educational Loan, Gold loan